\"ஆணுறை\".. ஓ மை காட்.. இப்படி எங்காச்சும் நடக்குமா.. பேஷண்ட்டை பார்த்து உறைந்த டாக்டர்கள்.. என்னாச்சு

போபால்: ஆணுறைகள் அடங்கிய ஆணுறை பெட்டியின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியைக்கூட்டி வருகிறது.. இதற்கு என்ன காரணம்?

இந்தியாவில் சுகாதார சேவைகள் பல சமயங்களில், பிறரால் புகழப்பட்டதுண்டு.. வியந்து பாராட்டப்பட்டதும் உண்டு..

ஆனால் சில சமயங்களில் இதே சுகாதார சேவைகள் கெட்டபெயரையும் ஏற்படுத்திவிடுவதை மறுக்க முடியாது.. மருத்துவமனைகளிலும், கிளினீக்குகளிலும் இது தொடர்பான எத்தனையோ அலட்சிய சம்பவங்கள் நடந்துள்ளன..

மார்ச்சுவரி

அவ்வளவு ஏன்? பிணவறையில்கூட, அங்கு நடக்கும் அலட்சியங்களும், அராஜகங்களும் வீடியோகவே வெளியாகி நாட்டு மக்களுக்கு கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் இப்போதும் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.. மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தை சேர்ந்த பெண் ரேஷ்மா பாய்… இவருக்கு தலையில் காயம் ஒன்று ஏற்பட்டு, ரத்தம் வந்துள்ளது.. அதனால், அங்குள்ள போர்ஸா கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் என்ற சமுதாய மருத்துவநலக் கூடத்திற்கு சிகிச்சைக்காக ரேஷ்மா வந்திருக்கிறார்..

 ரேஷ்மா பாய் + வார்டு பாய்

ரேஷ்மா பாய் + வார்டு பாய்

அப்போது அங்கிருந்த நர்ஸ் ஒருவர், தலைக்காயத்தில் இருந்து ரத்தம் வருவதை தடுப்பதற்காக, “காண்டம்” அட்டையை வைத்து ஒட்டி, அதன் மீது கட்டுப்போட்டுள்ளார்.. காண்டம் அட்டை வைத்தும், ரத்தம் நிற்கவில்லை.. அதனால், உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்லுமாறு ரேஷ்மாவிடம் நர்ஸ் சொல்லியுள்ளார். ரேஷ்மா பாயும், மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரத்தம் வழியும் தலையுடனே விரைந்துள்ளார்.. டாக்டர்களும், ரேஷ்மா பாயின் தலையில் இருந்த கட்டை அவிழ்த்து பார்த்தபோதுதான், தலையில் காண்டம் பாக்கெட்டுகள் அடங்கிய அட்டைப் பெட்டி இருந்ததை கண்டு அதிர்ந்தனர்..

ஆணுறைகள்

ஆணுறைகள்

அந்த பெட்டிக்குள் நிறைய ஆணுறைகளும் இருந்திருக்கின்றன.. ஆணுறைகளுடனேயே பெட்டியை வைத்து கட்டுப்போட்டிருக்கிறார் நர்ஸ். இந்த சம்பவமும், இந்த போட்டோவும்தான் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது. நடந்த சம்பவம் குறித்து,மொரேனா மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா சொல்லும்போது, ரேஷ்மா பாய் தரம்கர் பகுதியில் இருந்து சமுதாய நலக் கூடத்திற்கு சென்றிருக்கிறார்.. அந்த மருத்துவமனையின் டாக்டர் தர்மேந்திர ராஜ்புட், வேறொரு அவசர சிகிச்சையில் இருந்திருக்கிறார்.. இதனால் வார்டு பாய் அனந்த ராமுக்கு போனை போட்டு, எப்படி முதலுதவி செய்வது என்று விவரித்துள்ளார்..

 காண்டம் + அட்டை

காண்டம் + அட்டை

அதன்படி காயத்தின் மீது ஒரு பெரிய காட்டன் பேடை வைத்து, அதன் மீது கார்டு போர்டு போன்ற ஏதாவது ஒன்றை வைத்து கட்டுப்போட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கச் சொல்லியுள்ளார். ஆனால் அந்த வார்டு பாயோ கார்டு போர்டு, எதுவும் அங்கு அவசரத்திற்கு இல்லாததால், அங்கிருந்த தடிமனான காண்டம் அட்டையை வைத்துக் கட்டியுள்ளார்.. கட்டுப்போட்டவுடன், பருத்தி திண்டுக்கு மேல் சில அட்டைகளை வைக்குமாறு அறிவுறுத்தியதால், இந்த தவறு நிகழ்ந்துள்ளது. இந்த கட்டுப்போட்டது நர்ஸ் கிடையாது.. வார்டு பாய்”என்று விளக்கம் தந்தார்.

ஆணுறை

ஆணுறை

இதையடுத்து, காயத்துக்கு ஆணுறை கட்டுப்போட்ட, அந்த வார்டு பாயை, மாவட்ட சுகாதார நலத் துறை டிஸ்மிஸ் செய்துவிட்டது… ஆனாலும், இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… ஒரு வார்டு பாய்க்கு, கட்டுப்போடுவது எப்படி என்று தெரியாவிட்டாலும், ஆணுறை அட்டை பற்றியாவது தெரிந்திருக்குமே? என்று கண்டனம் சொல்லி வருகிறார்கள்.. அதேபோல, இந்த சம்பவத்துக்கு மாவட்ட கூடுதல் நீதிபதி நாரோட்டம் பார்கவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.