ஒரு வாழைப்பழத்திற்கு $120000 டாலரா.. இத்தாலிய வாழைப்பழ கலைஞர் மீது வழக்கு.. ஏன்?

மொரிசியோ கட்டெலன் (Maurizio Cattelan ) இந்த பலரை சிலர் அறிந்திருக்கலாம். இத்தாலியை சேர்ந்த இவர் ஒரு பிரபலமான ஒவியர். இவரின் ஓவியங்கள் சற்று முரண்பாடானதாக இருக்கும். அதற்கு பேர்போனவர்.

ஒரு உயிருள்ள கழுதையை ஃப்ரீஸ் கலை கண்காட்சிக்கு கொண்டு வந்தவர். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இவர் எப்படிப்பட்ட முரண்பாடான ஓவியர் என்று.

கடந்த 2021ல் இவரின் பெயர் பட்டிதொட்டியெல்லாம் பரவி இருந்தது. ஏனெனில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சுவரில் டேப் போட்டு ஒட்டி வைத்து, அதனை கலை கண்காட்சியில் காட்சிபடுத்தினர்.

இனி எண்ணெய்-க்கும், தங்கத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை..!!

கண்காட்சியில் வாழைப்பழம்

கண்காட்சியில் வாழைப்பழம்

மொரிசியோ அந்த வாழைப்பழத்தை காட்சிபடுத்தியோடு விடவில்லை. அதன் விலை 1,20,000 டாலர்களாகவும் நிர்ணயம் செய்தார். காமெடியன் என்றழைக்கப்பட்ட இந்த படைப்பானது ஆர்ட் பசேல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

ரூ.95 லட்சமா?

ரூ.95 லட்சமா?

மளிகை கடையில் இருந்து வாங்கப்பட்ட ஒரு பழுத்த வாழைப்பழம், கலைப்படைப்பு என ஓட்டப்பட்டது. இது விலை 1,20,000 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 95 லட்சம் ரூபாய்) விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கலைஞர் வழக்கு
 

கலைஞர் வழக்கு

இந்த பழுத்த வாழைப்பழத்தினை நியூயார்க்கினை சேர்ந்த கலைஞர் டேவ் டட்டுனா சாப்பிட்டு விட்டார் என்பது மற்றொரு சர்ச்சை. இதனால் கேலரி அதிகாரிகள் மற்றும் பி ஆர் அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஒற்றை வாழைப்பழம் அந்த காலகட்டத்தில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியது. இப்படி பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கலைஞர் ஒருவர், தற்போது இந்த வாழைப்பழத்தை டேப் போட்டு ஒட்டியதற்கு வழக்கு தொடுத்துள்ளார்.

வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சை

வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சை

2000ம் ஆண்டில் ஒரு பேனலில் ஜோ மோர்ஃபோர்டின் வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சை காட்சி படுத்தியிருந்தார். அதனை தான் தற்போது மொரிசியோ காப்பியடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மோர்ஃபோர்டின் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு உருவாக்கிய இந்த வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு உடன் உருவாக்கியது, காமெடியன் உடன் ஒற்றுமையை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது ஒரு கலையா?

இது ஒரு கலையா?

பல வருடங்களாக மொரிசியோ தனது இணையதளம், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் இருக்கும் கலைப்படைப்பை பார்த்திருக்கலாம். நான் இதனை 2000ல் செய்தேன். ஆனால் மொரிசியோ எனது ஐடியாவினை காப்பியடுத்துள்ளார். இது திருட்டா? என தனது பேஸ்புக் பக்கத்தில் கேட்டுள்ளார். எனினும் இதனை நீதிபதி இதனை ஒரு கலையாக கருத முடியுமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

யோசனைகளுக்கு பதிப்புரிமையா?

யோசனைகளுக்கு பதிப்புரிமையா?

யோசனைகளில் யாரும் பதிப்புரிமை கோர முடியாது. ஆக மொரிசியவின் காட்சிபடுத்தலுக்கு பதிப்புரிமை கோர முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

உண்மையில் வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவைகள் ஒரு யோசனைகளே தவிர, கலையல்ல.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

A case against the person who said banana is a painting on the wall? why?

A case against the person who said banana is a painting on the wall? why?/ ஒரு வாழைப்பழத்திற்கு $120000 டாலரா.. இத்தாலிய வாழைப்பழ கலைஞர் மீது வழக்கு.. ஏன்?

Story first published: Monday, August 22, 2022, 11:38 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.