கொழும்பிற்கும்  யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ரயில் மூலம் குறுகிய நேரத்திற்குள் பயணிக்க நடவடிக்கை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் மூலம் குறுகிய நேரத்திற்குள் ,பயணிக்கக்கூடியவகையில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான  பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண மக்களுக்கும், யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருதவதாக தெரித்த அமைச்சர் ,வடக்கு ரயில் பாதையில், மஹவ முதல் வவுனியா வரையிலான பகுதி குறுகிய காலத்தில் முழுமையாக நவீனமயப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
 
தற்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான நகரங்களுக்கு இடையிலான ரயில் பயணத்தை ஒரு மணித்தியாலயத்தால் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 
 
யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த திட்ட முன்மொழிவு ரயிலே திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.
 
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் பயணித்தார். 
 
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை சென்றடைந்த  அமைச்சர் ,ஊடகவியலாளர்கள் மத்தியில்  இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.