ராகேஷ் ஜூன்ஜூன்வாலா டிரஸ்ட்-ல் இவரா.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வின் குடும்பத்தின் மொத்த சொத்துக்களைத் தொழில் வல்லுநர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படும் கட்டமைப்பையும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தனது மறைவிற்கு முன்பே உருவாக்கியுள்ளார். இதில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் முதலீட்டு நிறுவனமான ரேர் எண்டர்பிரைசஸ்-ம் அடக்கம்.

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா 1985 ஆம் ஆண்டின் மத்தியில் வெறும் 5,000 ரூபாய் உடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்து நுழைந்தார். ஆகஸ்ட் 12 நிலவரப்படி அவரது பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு மட்டும் சுமார் 29,700 கோடி ரூபாயாக உள்ளது.

இந்நிலையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வின் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் குழுவில் முக்கியமான ஒருவர் இடம்பெற உள்ளார்.

5ல் ஒரு இளைஞருக்கு வேலையில்லை.. சீனாவின் மோசமான நிலை.. இந்தியா பரவாயில்லையோ?

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சொத்துக்களை நிர்வாகம் செய்யும் நிர்வாகக் குழுவில் அவரின் மிகவும் நம்பகமான நண்பர், குரு மற்றும் முன்னணி முதலீட்டாளர்-தொழில்முனைவோரா டிமார்ட் ராதாகிஷன் தமனி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மற்றும் ராதாகிஷன் தமனி நீண்ட கால நண்பர்கள்.

ராதாகிஷன் தமனி

ராதாகிஷன் தமனி

ராதாகிஷன் தமனி உடன் கல்பிரஜ் தரம்ஷி மற்றும் அமல் பரிக் ஆகியோரும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சொத்துக்களை நிர்வாகம் செய்யும் நிர்வாகக் குழுவில் இடம்பெற உள்ளனர். இந்த நிர்வாகக் குழு மூலம் ரேகா ஜூன்ஜூன்வாலா மற்றும் 3 பிள்ளைகளான 18 வயதான நிஷ்தா, டிவின்ஸ் மகன்களான 13 வயதான ஆர்யமான் மற்றும் ஆர்யவீர் ஆகியோருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.

ரேர் எண்டர்பிரைசஸ்
 

ரேர் எண்டர்பிரைசஸ்

ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் முதலீட்டு அமைப்பான ரேர் எண்டர்பிரைசஸ் (Rare Enterprises) – அவரது மற்றும் அவரது மனைவி ரேகாவின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இந்த ரேர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைத் தற்போது நிர்வாகம் செய்யும் உத்பல் ஷெத் மற்றும் அமித் கோலா தலைமையிலான நிர்வாகக் குழுவால் தொடர்ந்து நடத்தப்படும்.

உத்பல் ஷெத் மற்றும் அமித் கோலா

உத்பல் ஷெத் மற்றும் அமித் கோலா

உத்பல் ஷேத், ஜூன்ஜூன்வாலாவுக்கு முதலீட்டுத் துறையில் பெரிய அளவில் உதவினார், மேலும் கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் பங்கு முதலீடுகளில் முக்கியமாகக் கவனம் செலுத்தி வருகிறார். அமித் கோலா ஜூன்ஜூன்வாலாவுக்கு டிரேடிங்-கில் வலது கையாக இருந்தார், மேலும் நிறுவனத்திற்கான வர்த்தகப் புத்தகத்தையும் தனியாக நிர்வகித்து வந்தார்.

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா

இந்தியாவின் பணக்கார பங்கு முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா பல்வேறு உடல்நல கோளாறு காரணமாகக் கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் சுற்றி வரும் நிலையில் தனது இறப்பை முன்பே கணித்து, கடந்த 8 மாதங்களாக இந்த 29,700 கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் பணிகளைச் செய்து வந்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Radhakishan Damani soon to enter Helm of Rakesh Jhunjhunwala Trust

Radhakishan Damani soon to enter Helm of Rakesh Jhunjhunwala Trust | ராகேஷ் ஜூன்ஜூன்வாலா டிரஸ்ட்-ல் இவரா.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.