பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து…பயணிகள் குழப்பம்


 அக்டோபர் 29 திகதி வரை 600க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து.

மார்ச் இறுதி வரை குளிர்கால அட்டவணையில் 10,000 விமானங்களை பாதிக்கும் 

பிரித்தானிய ஏர்வேஸ் அக்டோபர் இறுதி வரை அதன் குளிர்கால அட்டவணையில் இருந்து ஆயிரக்கணக்கான விமானங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விமான ரத்துகளை தொடர ஹீத்ரோ முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில் அக்டோபர் 29 திகதி வரை 600க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து...பயணிகள் குழப்பம் | Uk British Airways Announces Flight CancellationsSky News

இதுத் தொடர்பாக பிரித்தானிய ஏர்வேஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ள தகவலில், எங்கள் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் திட்டமிட்டபடி பயணிப்பார்கள், மேலும் முக்கிய விடுமுறை இடங்களுக்கான பயணங்களை நாங்கள் பாதி காலத்திற்குப் பாதுகாத்து வருகிறோம், அத்துடன் அக்டோபர் இறுதி வரை மேலும் சில ரத்துகளைச் செய்ய வேண்டி உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் கூடுதலாக, எங்களிடம் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் கால அட்டவணையில் சில மாற்றங்கள் குறித்த அறிவிப்பை நாங்கள் வழங்குகிறோம், இதில் எங்களின் சில குறுகிய தூர விமானங்களை பல சேவை இலக்குகளுக்கு ஒருங்கிணைப்பதும் அடங்கும்.

இந்த மாற்றங்களினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பிரித்தானிய ஏர்வேஸ் அல்லது மற்றொரு விமான நிறுவனத்துடன் மாற்று விமானம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை நாங்கள் வழங்குவோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து...பயணிகள் குழப்பம் | Uk British Airways Announces Flight CancellationsSky News

கூடுதல் செய்திகளுக்கு: தசாப்தங்களில் மிக உயர்ந்த புள்ளியில்…அணுஆயுத ஆபத்து: ஐ.நா பொதுசெயலாளர் வருத்தம்

மார்ச் இறுதி வரை குளிர்கால அட்டவணையின் மொத்த கொள்ளளவு 8% குறைக்கப்பட்டு 10,000 விமானங்களை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.