மினுவாங்கொடையில் கப்பம் கோரியதற்காக ஹால் சமீர கைது

பல குற்றச்செயல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதற்காக ‘ஹால் சமீர’ எனப்படும் வர்ணகுலசூரிய கிறிஸ்டெபுகே சமீர சம்பத் பெர்னாண்டோவை துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மினுவாங்கொடை கெசல்கொட்டுவ பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்..

சந்தேக நபர் 36 வயதுடைய நபர் எனவும், அவர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் எனவும்
சந்தேக நபர் 2015 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் வர்த்தகர்களிடம் பெருமளவிலான அரிசியை கொள்வனவு செய்து போலி காசோலைகளை வழங்கிய குற்றசாட்டில் தேடப்படும் நபர், அவர் மேலும் கட்டான மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களில் கப்பம் கோருவதாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த நபர் .

மேலதிக விசாரணைகளில் சந்தேக நபர், நாவுல, மாரவில, தெஹியத்தகண்டி. மினுவாங்கொடை, குளியாப்பிட்டிய, மஹவ மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் வர்த்தகர்களிடமிருந்து அரிசியை கொள்வனவு செய்து 21 மில்லியன் ரூபா மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

மேலும்இ நீர்கொழும்பில் 2 மில்லியனுக்கும் அதிகமான நிதி மோசடிகள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் மேலும், தம்புத்தேகம பகுதியில் துப்பாக்கிகளை காட்டி மக்களை அச்சுறுத்தியமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எனவும் திங்கள்கிழமை நடந்த சோதனையின் போது, ​​இரண்டு இத்தாலிய துப்பாக்கிகள், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி, கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை விசேட அதிரடிப்படையினர்.

மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.