மதுரையில் எனக்கு பிடித்தது இந்த விசயம் தான் – நடிகர் விக்ரம்!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகவுள்ள நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சி மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகைகள் மிர்னாளினி ரவி, ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர்.  நடிகர் விக்ரம் வருகைக்காக ஏராளமான மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் ஆடல் ஆடியபடியும், பாடல் பாடியபடி காத்திருந்தனர். இதனையடுத்து கல்லூரிக்கு வருகை தந்த நடிகர் விக்ரம் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மத்தியில் கடும் நெரிசலில் சிக்கியபடி வருகை தந்தார்.

இதனையடுத்து மேடைக்கு வந்த பின் நடிகைகள் திரைப்படம் குறித்து பேசியதை அடுத்து நடிகர் விக்ரம் பேசியபோது, மதுரைக்கு வந்தவுடன் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் மீசை தானகவே மேலே சென்றுவிட்டது, நடிகர் துருவ் விக்ரம் அனைவருக்கும் ஐ லவ்யூ சொல்ல சொன்னார்.  மதுரை என்றாலே ரொம்ப பிடிக்கும், எனது அப்பா படித்தது அமெரிக்கன் கல்லூரி தான், நான் கல்லூரி படித்துகொண்டிருந்தபோது மதுரைக்கு அடிக்கடி வருவேன். மதுரை என்றாலே நல்ல ருசியான உணவும், ஜாலியும் தான், மதுரை அமெரிக்கன் கல்லூரி குறித்து இயக்குனர் அமீர் அடிக்கடி என்னிடம் பேசுவார். ஹவுஸ்புல் பட சூட்டிங்கின் போது மதுரைக்கு வந்த நான் மதுரை பற்றிய பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டேன். 

 

சுவையான வகை வகையான உணவுகளை சாப்பிட்டேன்,  இன்று நான் டயட்டில் இருந்தாலும் கூட மதுரை ஸ்பெசல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன் அவ்வளவு ருசியாக இருந்தது. அந்நியன் திரைப்படம் போன்று சண்டை, காதல், கிரைம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ள படம் கோப்ரா எனவும், மதுரைக்காரர்களுக்கு சினிமா என்றாலே வெறி தான் போல் என்பதை நிருபிக்கும் வகையில் அவ்வளவு வரவேற்பு தருகிறார்கள் என்றார்.  இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விக்ரம், உங்களுடைய பேவரிட் படம் எந்த படம் என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்தபோது தனது பேவரிட் கோப்ரா தான் என்றார்.

தொடர்ந்து மற்றொரு ரசிகர் நீங்க அப்பா செல்லமா, அம்மா செல்லமா? என்று கேட்ட கேள்விக்கு நான் எப்போதும் ரசிகர்களின் செல்லம் தான் என்றார்.  சினிமாவிற்கு வருவது கடினமா? எளிமையா? என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விக்ரம், சினிமாவிற்கு வருவது மிகுந்த கடினமானது இருந்தாலும் விடாமுயற்சி செய்தால் நிச்சயம் வரலாம் என்றார்.  தொடர்ந்து ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டார்.  இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் நடிகர் விக்ரம் நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.