Online Game Addiction: ஆன்லைன் கேம் மோகம், தந்தையின் மரணத்திற்கு காரணமான 12 வயது சிறுவன்!

உலகம் முழுவதிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பணம் கட்டி விளையாட கூடிய ஆன்லைன் விளையாட்டுகள் அதிகரித்த பின்னர் அதற்காக தற்கொலை செய்து கொள்வதும் பிறரை கொலை செய்வதும் கூட தற்போது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.

சீனாவை சேர்ந்த ஹுவாங் ஜெங்சியாங் என்ற கட்டுமான தொழிலாளி சமீப காலமாக மூளையில் புற்றுநோய் ஏற்பட்டு அதனால் அவதி பட்டு வந்தார். இவருக்கு 12 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இதில் அவரது இரண்டாவது மகனான 12 வயது ஹுவாங் தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த 3,800 யுவான் (இந்திய மதிப்பில் 44,167ரூபாய்) பணத்தை ஜியோமி கேமிங் சென்டரில் செலவளித்துள்ளான். ஒவ்வொரு முறை தனது தந்தையுடன் மருத்துவமனைக்கு செல்லும்போது பில் கட்ட வேண்டிய பணத்தை கட்டாமல் அந்த பணத்தில் ஆன்லைனில் விளையாடியுள்ளான்.

இந்நிலையில் அவனது தந்தை இறந்து விடவே அவரின் மருத்துவமனை பில்களை பைசல் செய்ய அவரின் உறவினர்கள் முற்படும்போதுதான் இந்த விஷயம் வெளி வந்துள்ளது. அந்த பணம் ஹுவாங்கின் மருத்துவ செலவுகளுக்காக உறவினர்கள் ஒன்றிணைந்து சேகரித்து கொடுத்த பணமாம்.

இந்நிலையில் கோபமடைந்த உறவினர்கள் ஜியோமியிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். முதலில் இவர்கள் சொன்னதை நம்ப மறுத்த ஜியோமி நிறுவனம் பிறகு ஆராய்ந்து பார்த்து தகவலை உறுதி படுத்திய பிறகு பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர்.

ஹுவாங் இறந்ததை அடுத்து இரண்டு சிறுவர்களின் தாயும் ஏற்கனவே இறந்து விட்ட காரணத்தால் இருவரும் சிறுவர்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பேசிய அந்த 12 வயது சிறுவன் அவனது அப்பாவின் மரணத்திற்கு வருந்துவதாகவும் , தான் செய்த தவறுக்கு வருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளான்.

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக விளையாடக்கூடிய இளைஞர்களில் 15இல் 10 பேர் அதற்கு அடிமையாகும் நிலைக்கு செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சதவிகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையில் வந்த தகவலின் படி இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 3.5% பேர் IGD என்று சொல்லக்கூடிய இன்டர்நெட் கேமிங் டிசார்டருக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர். இது லக அளவிலான பாதிப்பு சதவீதத்தை விட அதிகம். இதில் இந்தியாவில் 8% ஆண்களும் 3% பெண்களும் IGD யால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

– சுபாஷ் சந்திரபோஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.