முக்கிய சேவைகளை முடக்கும் Google, Meta, Amazon, உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள்!

மெட்டா நிறுவனத்தின் பகுதியான முகநூல், கூகுள் , மைக்ரோசாப்ட் , அமேசான் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் வழங்கி வரும் சேவைகளை நிறுத்த போவதாக அறிவித்துள்ளனர்.

மெட்டா

மெட்டா நிறுவனத்தின் பகுதியான முகநூல் நிறுவனம்தான் இந்த பட்டியலில் அதிக சேவைகளை மூட இருக்கிறது. Facebook gaming, facebook live shopping, facebook social app for couples ஆகிய மூன்று சேவைகளையும் முகநூல் நிறுத்த போவதாக அறிவித்துள்ளது.

பொதுமுடக்க காலத்தில் தங்களின் பயனர்களுக்காக துவங்கிய Tuned என்ற டேட்டிங் செயலியை செப்டம்பர் 19 ஆம் தேதியோடு நிறுத்த போவதாக அறிவித்துள்ளது.

அதே போல் இனி முகநூல் மூலம் எந்த விதமான நேரலை ஷாப்பிங் நிகழ்வுகளை நடத்த முடியாது என்று அறிவித்துள்ளனர். இனி ரீல்ஸ் போன்ற சிறிய விடீயோக்களின் மீது கவனம் செலுத்த போவதாகவும் அதனால் அக்டோபர் 1 முதல் ஷாப்பிங் நேரலை நிகழ்வுகளை முகநூலில் நடத்த முடியாது என்றும் அறிவித்துள்ளனர்.

முகநூலில் பதிவுகள் மட்டுமல்ல சலிப்படைந்தால் விளையாடவும் செய்யலாம் என முகநூல் 2020 ஆம் ஆண்டு facebook gaming வசதியை அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 28லிருந்து அதையும் நிறுத்த போவதாக அறிவித்துள்ளனர். எனவே இந்த காலக்கெடுக்குள் பயனர்கள் தங்கள் டேட்டாவை பேக்கப் எடுத்து வைத்து கொள்ளுமாறு நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

மைக்ரோசாப்ட் (microsoft)
அடுத்து வரிசையில் இருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனம்.இதன் இரண்டு சேவைகளை நிறுத்த போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.olympia corp மற்றும் kaizala ஆகிய செயலிகளை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது இந்நிறுவனம்.

வணிக பரிசோதனைகளுக்காக 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒலிம்பியா கார்ப் செயலியை செப்டம்பர் 12ஆம் தேதியோடு நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. மேலும் மைக்ரோசாப்ட்டின் மெசேஜிங் சேவையான கைசாலாவையும் நேற்றோடு (ஆகஸ்ட் 31) நிறுத்த போவதாக அறிவித்திருந்தனர்.

கூகுள்

மில்லியன்கணக்கான டிவைஸ்களின் டேட்டாவை நிர்வகிக்கும் சேவையை செய்து வந்த IoT கோர் சேவைகளை நிறுத்த போவதாகவும் சமீபத்தில் கூகுள் கிளவுட் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு வரை இந்த சேவை ஏற்கனவே உள்ள பயன்பாட்டளர்களுக்கு மட்டும் தொடரும் எனவும் புது பயனாளர்கள் சேர்க்க பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

அமேசான்

உலக அளவில் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தன் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கி வந்த அமேசான் கேர் சேவையை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. அமேசானின் மூத்த துணை தலைவர் இதை மெயில் மூலம் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளார்.

– சுபாஷ் சந்திரபோஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.