Poco M5 விலை, சிறப்பம்சங்கள் மற்றும் இன்னும் இதர தகவல்கள்

Poco F4 5G வெளியீட்டுக்கு பின்பாக தற்போது வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி Poco M5 மற்றும் Poco M5s ஆகிய மாடல்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் அதில் இடம்பெறப்போகும் ப்ராசஸர் உட்பட பல்வேறு அம்சங்களின் பெயர்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

ஜியோமியின் கிளை நிறுவனமான போக்கோ நிறுவனம் ஏற்கனவே செப்டம்பர் 5 மாலை 5.30 மணிக்கு உலக அளவில் போக்கோ M5 மற்றும் போக்கோ M5s மாடல்களை வெளியிட போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் ஃபிளிப்கார்ட் தளத்தில் இந்த மொபைலின் ஒரு சில சிறப்பம்சங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

அந்த தளத்தில் வெளியான தகவலின் படி Poco M5 மாடல் MediaTek Helio G99 octa-core ப்ராசஸர் பொறுத்த பட்டு வெளியாக போவதாக தெரிகிறது. பின்பக்கம் மூன்று கேமராக்கள் மற்றும் புதிய டிஸைன்களோடு வெளியாக போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்ட்ராய்ட் 12 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்தியாவில் M5 4G வேரியண்ட்தான் வெளியாக உள்ளது.. அதன் டிஸ்பிளே முழு HD வடிவமைப்பில் 6.58 இன்ச்சில் LCD திரையில் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.90Hz ரெஃப்ரெசிங் ரேட் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஃபிங்கர்பிரிண்ட் பாதுகாப்பு வசதி இன்-டிஸ்பிளே டைப்பில் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 5000mAh பேட்டரி திறன் வசதியடன் 33w வேகமான சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10,000 லிருந்து 15,000 வரை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

6.5இன்ச் IPS LCD + FHD90Hz ரெஃப்ரெசிங் ரேட்MediaTek Helio G99 octa-core ப்ராசஸர்5000 mAh பேட்டரி + 33W வேகமான சார்ஜிங் வசதிவிலை எதிர்பார்ப்பு 10,000 – 15,000
– சுபாஷ் சந்திரபோஸ்

Poco-M5-Pro-5G விவரங்கள்முழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.