ஒன்றரை நிமிடத்தில் கனிம அட்டவணையில் உள்ள 118 கனிமவளங்களை கூறி ஆசிய புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பெற்ற 6 வயது சிறுவன்.!

நெல்லை: ஒன்றரை நிமிடத்தில் 12 ம் வகுப்பு பாடத்தில் உள்ள வேதியியல் கனிம அட்டவணையில் உள்ள 10 தொகுப்பான 118 கனிமவளங்களை கூறி ஆசிய புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பெற்ற 6 வயது சிறுவன். இதுவரை 3 விதமான சாதனைகளை படைத்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள நெல்லை சிறுவனை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை மகராஜநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தான் பிரபுராஜ், ஆர்த்தி ஹரிப்பிரியா தம்பதி. பிரபுராஜ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

தாய் ஆர்த்தி பல் மருத்துவராக இருக்கிறார். இந்த  தம்பதியின் மகன் தான் சதுர்கிருஷ் ஆத்விக்.  தனது குழந்தை பருவம் முதல் தொடர் சாதனைகளை நிகழ்த்தி வரும் இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில்  முதலாம் வகுப்பு படித்து வருகிறர்.  இவர் தனது 3 வயது முதல் உலகப்பொதுமறை நூலான திருக்குறளை ஆர்வமுடன் கற்றுவருகிறார். அதன் விளைவாக மூன்றரை  வயதில் 53 திருக்குறளை 3 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனை நிகழ்த்தினார். இந்த சாதனையை தொடர்ந்து அடுத்த சாதனை முயற்சியாக  100 திருக்குறள்களை 5 நிமிடம் 40 நிமிடங்களில் கூறி மீண்டுமொரு  சாதனை நிகழ்த்தினார். இந்த சாதனைகளை  இந்தியா புக் ஆப் ரிக்காட்ஸ், டிரயம்ப் வேல்டு ரிக்காட்ஸ், கிளோபல் ரிக்காட்ஸ் அன்டு ரிசர்ச்சு பவுன்டேஷன்  ஆகியவை அங்கிகரித்து கேடயம் மற்றும் சான்றிதளை பரிசளித்துள்ளது.

தற்போது தனது 6 வயதில் 11 மற்றும் 12 – வகுப்பில் பயிலும்  வேதியியல் கனிம அட்டவணையில் உள்ள 10 தொகுப்பான 118 ‘கனிமங்களின் பெயர்களை 1 நிமிடம் 33 விநாடிகளில் கூறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை ஆசியா புக் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்துள்ளது . இது தவிர இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தலைநகரம், உலக நாடுகளின் தலைநகரங்கள் என கூறி பதக்கங்களும், பரிசு கோப்பைகளும்  விருதுகளும் வாங்கி குவித்துள்ளார். இளம் வயதில் சாதனை மேல் சாதனை நிகழ்த்தி வரும் சிறுவனை நெல்லை மாவட்ட ஆட்சியர விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்.  தமிழ்மேல் கொண்ட பற்றின் காரணமாக 1330 திருக்குறளையும் மிக  குறைந்த நேரத்தில் கூறி சாதனை படைக்க வேண்டும் என்பதே சாதனை சிறுவனின் லட்சியமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.