மூக்கு வழி செலுத்தும் தடுப்பு மருந்துஅவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி| Dinamalar

புதுடில்லி, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்துள்ள, மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருத்தின் அவசரகால பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ., அனுமதி அளித்துள்ளது.நம் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, ‘கோவிஷீல்டு, கோவாக்சின்’ உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதில், ‘கோவாக்சின்’ தடுப்பூசியை, தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்த நிறுவனம், மூக்கு வழியாக செலுத்தக்கூடிய, ‘பிபிவி 154’ என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்ட 4,000 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.இதில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. எனவே, இந்த மூக்கு வழி செலுத்தும் தடுப்பு மருந்து, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, இந்த மருந்தின் அவசர கால பயன்பாட்டுக்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.