iphone தயாரிக்கும் முயற்சியில் டாடா குழுமம்… விஸ்ட்ரானுடன் பேச்சுவார்த்தை!

ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  ஒரு நிகழ்ச்சியில்  ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐபோன் 14 சீரியல், மாடல்களை, இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது.  இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம்,  அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவில் iPhone 14 மாடல் போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் ஐபோன்களின் முதன்மை உற்பத்தியாளராக சீனாவை பெரிதும் சார்ந்திருக்கும் நிலையை மாற்றும் முயற்சியாக, ஆப்பிள் இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்திற்காக பல வகையான ஐபோன்களை உற்பத்தி செய்யும், ஃபாக்ஸ்கான்( Foxconn), விஸ்ட்ரான் (Wistron) மற்றும் பெகாட்ரான் (Wistron) உள்ளிட்ட சில இந்திய கூட்டாளி நிறுவனங்கள் உள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய நிறுவனமான டாடா குழுமம், ஆப்பிள் ஐபோனை விரைவில் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆப்பிளின் முக்கிய சப்ளையர்களில் ஒருவரான தைவான் சப்ளையர் விஸ்ட்ரானுடன் டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவும், லக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கூட்டு முயற்சி ஆலை ஒன்றை நிறுவுதல், ஐபோன்களை அசெம்பிள் செய்தல் ஆகியவை தொடர்பாக  விஸ்ட்ரான் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறது எனவும் தகவல்கள் கூறுகின்றன.  

இந்தியாவில், டாடா குழுமம் மிகவும் புகழ் பெற்ற, நம்பகமான பிராண்ட் ஆகும். டாடா நிறுவனம் ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள் மற்றும் மென்பொருளை உற்பத்தியுடன், உப்பு உற்பத்தியின் கூட முன்னணி நிறுவனமாக உள்ளது. டாடா இந்தியாவில் ஐபோன் உற்பத்தியைத் தொடங்கினால், நிறுவனம் தொழில்நுட்ப உற்பத்தியில் ஒரு புதிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனமாகவும் டாடா இருக்கலாம். உலக நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில்,  இதனால் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவும் பெரிய அளவில் பலன் பெறும்.

அறிக்கையின்படி, தயாரிப்பு மேம்பாடு, விநியோகச் சங்கிலி மற்றும் அசெம்பிளி ஆகியவற்றில் விஸ்ட்ரானின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள டாடா நிறுவனம் விரும்புகிறது. எனினும், ஒப்பந்த  விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விஸ்ட்ரானின் இந்தியா செயல்பாடுகளில் டாடா சில பங்குகளை வாங்கலாம். அதற்கு மாற்றாக, டாடா புதிய அசெம்பிளி ஆலையையும் அமைக்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.