உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், அஸ்வினுக்கு இடம்


உலகக் கோப்பை அணியில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக், அஸ்வின்

ரோகித் சர்மா தலைமையில் உலகக் கோப்பையில் களம் காணும் 15 பேர் கொண்ட இந்திய அணி

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16ஆம் திகதி தொடங்குகிறது.

அவுஸ்திரேலியாவில் நடக்கும் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Dinesh Karthik

Twitter

துணை கேப்டனாக கே.எல்.ராகுலும், மற்றோரு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளனர்.

வேகப்பந்து வீச்சுக்கு ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோரும், சுழற்பந்து வீச்சுக்கு சஹாலும் உள்ளனர். ஆல்ரவுண்டர் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, அக்சர் பட்டேல் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

Ravichandran Ashwin

அணி விபரம்: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராத் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், சஹால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷிதீப் சிங்    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.