Tamil news Today Live: ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 116-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

2024-ல் ககன்யான் திட்டம் உறுதி

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் 2024-ல் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதிப்பட தெரிவித்தார். இந்தாண்டுக்குள் சோதனை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வெற்றி

டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா<br>8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி உடல்

பிரிட்டன்: லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணி எலிசபெத் உடல் கொண்டுவரப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி உயிரிழந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
15:36 (IST) 14 Sep 2022
ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபேத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்கிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு. செப்டம்பர் 17-இல் லண்டன் செல்லும் குடியரசுத் தலைவர் முர்மு செப்டம்பர் 19-இல் நடைபெறும் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார்.

15:00 (IST) 14 Sep 2022
குடியரசுத் தலைவர் லண்டன் பயணம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் 19ம் தேதி நடைபெறும் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க, 3 நாள் பயணமாக வரும் 17ம் தேதி லண்டன் செல்கிறார்

14:32 (IST) 14 Sep 2022
8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் உட்பட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர். இதன்மூலம், 40 தொகுதிகளை கொண்ட கோவாவில், 11ஆக இருந்த காங்கிரஸ் பலம் 3ஆக குறைந்தது.

13:40 (IST) 14 Sep 2022
பள்ளியில் ஆய்வு

ராயப்பேட்டை தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மதமாற்றம், விதிமீறல்கள் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

13:17 (IST) 14 Sep 2022
மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

13:02 (IST) 14 Sep 2022
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஹிந்து தரப்பினர் கேவியட் மனு தாக்கல்

ஞானவாபி மசூதி விவாகாரத்தில் உரிமையியல் மனுக்களை விசாரணைக்கு ஏற்ற விவகாரம் . அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஹிந்து தரப்பினர் கேவியட் மனு தாக்கல்

12:22 (IST) 14 Sep 2022
நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் ஆஜர்

பண மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் ஆஜர்

12:21 (IST) 14 Sep 2022
மின் கட்டண உயர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

மின் கட்டண உயர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல். மின்கட்டண உயர்வு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கேவியட் மனு. மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு கடந்த 1ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்,

11:57 (IST) 14 Sep 2022
அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்கள் 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

11:28 (IST) 14 Sep 2022
அதிமுக அலுவலக வழக்கு; அலுவலக மேலாளர் விசாரணைக்காக ஆஜர்

அதிமுக அலுவலக வழக்கு தொடர்பாக அலுவலக மேலாளர் மகாலிங்கம் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் . சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மகாலிங்கம் ஆஜரானார்.

11:27 (IST) 14 Sep 2022
ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் நீரால் பொதுமக்கள் பாதிப்பு

ஓமலூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் நீரால் பொதுமக்கள் பாதிப்பு . 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் பாதிப்பு . ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் ஊற்றெடுப்பதால் இடுப்பளவிற்கு தேங்கி நிற்கும் நீர். ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் மாணவ, மாணவிகள்

11:26 (IST) 14 Sep 2022
எலி மருந்து கொடுத்து கொலை

காரைக்காலில் படிப்பில் போட்டி காரணமாக பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த விவகாரம் . எலிமருந்து கலந்து கொடுத்ததாக கொலையாளி சகாயராணி விக்டோரியா வாக்குமூலம்.

11:12 (IST) 14 Sep 2022
கோவா காங். எம் எல் ஏக்கள் 8 பேர் பாஜவில் இன்று இணைகின்றனர்

கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவில் இணைய இருப்பதாக அந்தக் கட்சியின் மாநிலத்தலைவர் சதானந்த் ஷெட்தனவாடே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து மைக்கேல் லோபோ, திகம்பர் காமத் ஆகியோரும் பாஜகவுக்கு தாவுவது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11:06 (IST) 14 Sep 2022
பள்ளி மாணவர்களுக்கு ‘சிற்பி’ திட்டம் தொடக்கம்

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு ‘சிற்பி’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காண்பது, அவர்களுக்கு வழிகாட்டுவதே திட்டத்தின் நோக்கம்

சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு திட்டம் செயல்படும்

8-ம் வகுப்பு முதல், மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தனி சீருடை வழங்க ஏற்பாடு

முதலமைச்சர் முன்னிலையில் சிற்பி திட்டத்திற்கான உறுதி மொழி ஏற்ற மாணவர்கள்

11:05 (IST) 14 Sep 2022
எலிமருந்து கலந்து கொடுத்ததாக சகாயராணி வாக்குமூலம்

காரைக்காலில் படிப்பில் போட்டி காரணமாக பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த விவகாரம்

எலிமருந்து கலந்து கொடுத்ததாக கொலையாளி சகாயராணி விக்டோரியா வாக்குமூலம்

11:03 (IST) 14 Sep 2022
ஜம்மு-காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி என தகவல்

ஜம்மு-காஷ்மீர்; பூஞ்ச் நகர் சாவ்ஜியன் பகுதியில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி என தகவல்

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்

10:58 (IST) 14 Sep 2022
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் – அமைச்சர் ரகுபதி

10:01 (IST) 14 Sep 2022
5,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் மேலும் 5,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனாவில் இருந்து மேலும் 5,675 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் 45,749 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

09:57 (IST) 14 Sep 2022
இலங்கை தமிழர்கள் குடியிருப்பை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட மறுவாழ்வு முகாமை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தோட்டனூத்தில் ரூ. 17.17 கோடி மதிப்பீட்டில், 321 தனித்தனி வீடுகளுடன் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம். நூலகம், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்

08:45 (IST) 14 Sep 2022
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – விடுமுறை

பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்றிரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் 2வது நாளாக பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்பநாய் உதவியுடன் நிபுணர்கள் பள்ளியில் மீண்டும் சோதனை

08:44 (IST) 14 Sep 2022
பிரதமர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார்

ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் செல்கிறார்

ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் செல்கிறார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.