அமெரிக்காவில் பிரதமரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

வாஷிங்டன் : அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் ௭௨வது பிறந்த தினத்தை கொண்டாடினர்.

பிரதமர் மோடியின் 72வது பிறந்த நாள் நேற்று முன்தினம் நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பிரதமரின் பிறந்த நாளை கொண்டாடினர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்கர்களும் பங்கேற்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

”இந்தியா, உலகின் தலைமையாக மாறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசு அடித்தளமிட்டது. அவரது எட்டு ஆண்டு கால ஆட்சியில் இந்தியா வெகுவாக முன்னேறியுள்ளது. அவரது வாழ்க்கையின் குறிக்கோளே, மக்களுக்கு எவ்வாறு சேவை செய்வது என்பது தான்,” என, அமெரிக்கா சென்றுள்ள பா.ஜ., செய்தித் தொடர்பாளர் அமன் சின்ஹா தெரிவித்தார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகர் மேரி மில்பென், ‘உங்களது பயணத்துக்கு கடவுள் தொடர்ந்து வலிமையை தரட்டும்’ என, சமூக வலைதளத்தில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.