உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்-பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

latest tamil news

ராணி உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளிலும் உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பு காரணமாக, 8ம் தேதி இரவு காலமானார்.ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து அவரது உடல், 14ம் தேதி லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

பிரிட்டன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று இரவு பகலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று பிற்பகலில் வரிசை மூடப்பட்டது. ஏற்கனவே வரிசையில் இருப்பவர்கள் இன்று காலை வரை அஞ்சலி செலுத்தலாம். இந்த வரிசையில் புதிதாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது.

கைது

அஞ்சலி செலுத்த வந்த முஹமது கான் என்பவர், வரிசையில் இருந்து விலகிச் சென்று ராணி உடல் இருந்த பெட்டியை தொட முயன்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், ஜப்பான் மன்னர் நருஹிட்டோ உட்பட உலக நாடுகளின் தலைவர்கள், பிரிட்டன் ராணி உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினர். இன்று நடக்கும் இறுதிச் சடங்கு மற்றும் அடக்கம் செய்யும் நிகழ்ச்சிகளிலும் உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ராணி உடல் அடக்கம் செய்யப்படுவதை முன்னிட்டு, பிரிட்டனில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இறுதிச்சடங்குகளுக்கான இறுதிக்கட்ட பணிகள் நேற்று நிறைவடைந்தன. நாடு முழுதும் இருந்து போலீசார் லண்டனில் குவிக்கப்பட்டுள்ளனர். துருக்கி நாட்டில் இருந்து, 13 ஆயிரம் கிலோ பூக்கள் விமானம் வாயிலாக கொண்டு வரப்பட்டுள்ளன.

இரங்கல் குறிப்புஇறுதி ஊர்வலம் மற்றும் உடல் அடக்கம் செய்யும் நிகழ்வுகளை, பொது இடங்களில் நாடு முழுதும் ‘டிஜிட்டல்’ திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வின்ஸ்டர் கோட்டை வளாகத்தில் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் பிலிப் உடலும், இதே வளாகத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டது.

latest tamil news

இந்தியா சார்பில் இரங்கல் தெரிவிக்கவும், ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் ஜனாதிபதிதிரவுபதி முர்மு, மூன்று நாள் பயணமாக நேற்று காலை லண்டன் வந்தடைந்தார். வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரவுபதி முர்மு, லான்காஸ்டர் ஹவுசில் வைக்கப்பட்டு இருந்த புத்தகத்தில் இரங்கல் குறிப்பு எழுதினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.