கள்ளத்தனமாக ஊடுருவும் ரஷ்ய வைரம்.. கட்டுப்படுத்த முடியாத உலக நாடுகள்..!

ஒவ்வொரு மாதமும் பல நூறு மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ரஷ்ய வைரங்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் மும்பை வைர தொழிற்சாலைகள் முதல் நியூயார்க்கின் ஐந்தாவது அவென்யூவில் உள்ள ஆடம்பர நகைக் கடைகள் வரை பரவியிருக்கும் உலகளாவிய வைரம் மற்றும் வைர வர்த்தகச் சந்தை பாதிக்கப்பட்டு உள்ளது.

9 மாதத்தில் மர்மமாக இறந்த 5 ரஷ்ய தொழிலதிபர்கள்..!

ரஷ்ய வைரங்கள்

ரஷ்ய வைரங்கள்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடர்ந்து உலகளவில் இருக்கும் பல முன்னணி வியாபாரிகள், சப்ளையர்கள் ரஷ்ய வைரங்களை வாங்கவும், பயன்படுத்தவும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் ரஷ்ய வைர சுரங்க நிறுவனமான அல்ரோசா PJSC மீது அமெரிக்கப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்திய வைர வியாபாரிகள்

இந்திய வைர வியாபாரிகள்

ஆனால் ஒரு சில இந்திய மற்றும் பெல்ஜிய வைர வியாபாரிகள் சரியான நேரம் பார்த்து உலக நாடுகள் போட்டிப்போடாத நிலையில் குவிக்க வைக்கப்பட்டு இருக்கும் வைரங்களில் தரமான மற்றும் தனித்துவமான வைரங்களைத் தேடி தேடி எடுக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

 சிறப்பான வாய்ப்பு
 

சிறப்பான வாய்ப்பு

இதனால் சிறப்பான வைரத்தை தேர்வு செய்வது மட்டும் அல்லாமல் போட்டி இல்லாத காரணத்தால் குறைவான விலைக்கு வாங்கும் வாய்ப்புகளை இந்திய மற்றும் பெல்ஜிய வைர வியாபாரிகள் பெற்றுள்ளனர். மேலும் இந்த வர்த்தகம் வைர உலகிற்குக் கூடத் தெரியமல் ரகசியமாகச் செய்யப்பட்டு வந்துள்ளது.

சப்ளை செயின்

சப்ளை செயின்

இந்திய மற்றும் பெல்ஜிய வைர வியாபாரிகள் எவ்விதமான விதிகளை மீறவில்லை என்றாலும், உலக நாடுகள் தடை விதித்திருக்கும் வேளையில் சர்வதேச சப்ளை செயினில் இந்த வைரங்கள் வரும் போது அதை யாராலும் தடுக்கவும் முடியாது, கண்டு பிடிக்கவும் முடியாது.

15000 ரக வைரங்கள்

15000 ரக வைரங்கள்

வைர விற்பனை சந்தையில் எப்போது வைரங்களைப் பார்சல் ஆகத் தான் விற்பனை செய்யப்படும், அதாவது ஓரே சைஸ் மற்றும் தரம் அடிப்படையில் விற்பனை செய்யப்படும். இதனால் ரஷ்ய வைரம் என்பதைத் தனியாகப் பிரிக்கவோ, கண்டு பிடிக்கவோ முடியாது. வைரம் சுமார் 15000 ரகங்கள் உள்ளது.

அல்ரோசா PJSC நிறுவனம்

அல்ரோசா PJSC நிறுவனம்

இந்நிலையில் போருக்கு முன்பு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்ய அல்ரோசா PJSC நிறுவனத்திடம் இருந்து வாங்கிய வைரங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது புதிய வைரத்திற்காக அல்ரோசா PJSC-வின் போட்டி நிறுவனமான De Beers நிறுவனத்திடம் ஆர்டர் குவிந்துள்ளது.

ரஷ்யா ஆதிக்கம்

ரஷ்யா ஆதிக்கம்

உக்ரைன் போருக்கு பின்பு உலக நாடுகள் மட்டும் அல்லாமல் வைர வியாபாரமும் இரண்டாக உடைந்துள்ளது. ரஷ்யா கச்சா எண்ணெய், எரிவாயு, ஆயுதம், டெக் மட்டும் அல்லாமல் வைரத்திலும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia diamonds entering world market secretly with Indian and Belgian buyers

Russia diamonds entering world market secretly with Indian and Belgian buyers; Russian Diamond miner alrosa pjsc on US sanctions list

Story first published: Tuesday, September 20, 2022, 16:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.