எந்த அரசை விமர்சித்து இந்தியன் 2வை எடுக்கப் போகிறார் இயக்குநர் ஷங்கர்? கிளம்பிய விவாதம்!

சென்னை: இந்தியன் முதல் பாகம் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை சேனாபதி கொடூரமாக கொல்வதாக இயக்குநர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து படமாக இயக்கி இருப்பார்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் கதை என்னவாக இருக்கும் என்றும் எந்த அரசை விமர்சித்து அவர் படம் எடுக்கப் போகிறார் என பரபரப்பு விவாதங்கள் கிளம்பி உள்ளன.

உதயநிதி ஸ்டாலின் படத்தை தயாரித்து வரும் நிலையில், அவர் தரப்பில் இருந்தும் இயக்குநர் ஷங்கருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

மீண்டும் ஆரம்பமான இந்தியன் 2

இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கமல் இருக்கும் போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. இயக்குநர் ஷங்கர் படு ரகசியமாக இந்தியன் 2 படத்தின் கதை மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் என எதுவும் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

குதிரை ஏற்றம் கற்கும் காஜல்

குதிரை ஏற்றம் கற்கும் காஜல்

இந்தியன் 2 படம் டிராப் ஆகி விட்டதாகவே நினைத்து திருமணம் செய்து குழந்தையையும் பெற்றுக் கொண்ட காஜல் அகர்வால் படம் மீண்டும் தொடங்கி உள்ள நிலையில், படத்திற்காக குதிரை ஏற்றம் உள்ளிட்ட விஷயங்களை பயிற்சி செய்து வருகிறார். குதிரையில் ஏறி சவாரி செய்யும் காட்சிகளையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாராளமாக பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

எந்த அரசை விமர்சித்து

எந்த அரசை விமர்சித்து

இந்தியன் திரைப்படம் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை விமர்சித்து உருவாக்கப்பட்டு இருக்கும். முதல்வன் திரைப்படம் முதலமைச்சரையே எதிர்த்து உருவாக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில், இந்தியன் 2 எந்த அரசை விமர்சித்து இருக்கப் போகிறது என்கிற கேள்வி கோலிவுட் திரையுலகில் பெரும் விவாதமாகவே மாறி உள்ளது.

கமல் அரசியல்

கமல் அரசியல்

இந்தியன் 2 படத்தை ஆரம்பித்ததே ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியை எதிர்த்து ஒரு படத்தை உருவாக்கி தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் ஆரம்பித்தார் என்றும் அப்போது பேச்சுக்கள் கிளம்பின. ஆனால், தற்போது படத்தையே உதயநிதி ஸ்டாலின் தான் தயாரித்து வருவதால் நிச்சயம் ஆளுங்கட்சியை எதிர்த்து எந்தவொரு காட்சிகளும், வசனங்களும் இடம்பெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு

ஒன்றிய அரசை எதிர்த்து ஒரு வேளை பிரம்மாண்டமாக இந்தியன் 2 படத்தின் கதை இருக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சேனாபதியின் பேரனாக இந்த படத்தில் சித்தார்த் நடித்து வருவதும் குறிபிடத்தக்கது. ஆனால், லோக்கல் அரசியலை பேசாமல் இங்கே படம் எந்தளவுக்கு ரசிகர்களை கனெக்ட் செய்யும் என்கிற கேள்வியும் எழுகிறது.

ஷங்கருக்கு சுதந்திரம்

ஷங்கருக்கு சுதந்திரம்

இயக்குநர் ஷங்கர் மீண்டும் இந்த படத்தை இயக்க ஒப்புக்கொண்ட போதே தனக்கான சுதந்திரம் இருந்தால் மட்டுமே பண்ணுவேன் என ஓப்பனாகவே பேசியுள்ளார். அதன் காரணமாக அவரது இந்தியன் 2 கதையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் படம் உருவாகி வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான பின்னர், சர்ச்சைகள் கிளம்புமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.