பாராளுமன்ற தேசியப் பேரவை தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கானது -அமைச்சர் நஸீர் அஹமட்

நாட்டில் பல வருட காலம் எத்தனையோ குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பிரச்சினைகளுக்கு நிரந்தர கிட்டவில்லை. .இருப்பினும் தேசியப் பேரவை தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தான் அமைக்கப்பட்டுள்ளது என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற தேசியப் பேரவை தொடர்பான விவாதத்தில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த சபையை எவ்வாறு முன்னேற்றலாம் என்ற கருத்துக்களை முன்வைத்து இப்பேரவையை ஒவ்வொரு பிரச்சினையையும் அணு அணுவாக அணுகி எமது பிரச்சினைகளுக்கான ஏதேனும் ஒரு தீர்வைக் கணக் கூடிய தேசிய சபையாக மாற்றுவோம் என அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்:

குறுகிய மற்றும் நடுத்தர பொருளாதார அபிவிருத்திக்காக 35பேரைக் கொண்ட தேசியப் பேரவை அமைக்கப்பட்டாலும், அரசியல் கட்டமைப்பு முறைகளில் மாற்றத்தைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாட்டில் வீரப் பேச்சுக்கள் பேசினாலும் இன்னும் பொருள் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது
20இற்கும் அதிகமான அமைச்சர்களும் 40இற்கும் மேற்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் பிரதி அமைச்சுக்கள் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் நாட்டின் நிலை பற்றி இன்னும் சிந்திக்க வேண்டியுள்ளது. எவ்வளவுதான் பாராளுமன்றத்தில் வீரப் பேச்சுக்கள் பேசினாலும் தினசரி விலை அதிகரிப்பால் மீனவர்கள், விவசாயிகள், சுயதொழில் செய்பவர்கள், மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் என சகலரும் பாரியளவில் பாதிக்கப்படுகிறார்கள். பல்வேறு மாபியாக்கள் தோன்றியுள்ளன. கோதுமை மாவின் தரமற்ற நிலை மற்றும் தட்டுப்பாட்டினால் பேக்கரி உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாடும் மக்களுக்கு மருந்துத் தட்டுப்பாட்டினால் சிரமப்படுகிறார்கள். அரச வைத்திய சாலைகளில் மருந்து வழங்காது தனியார் வைத்தியசாலை அல்லது பாமசிகளில் வாங்குமாறு கூறுகிறார்கள். இதனை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும் .

அத்துடன் நாட்டில் காணி சுவீகரிப்புக்கள் இடம்பெறுகின்றன. தோப்பூர் இக்பால் நகர் பிரதேச மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதுடன் அங்கு வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுடைய இன ஒற்றுமையைக் குழப்பும் சக்திகள் அங்கு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.