பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுப்பதற்கான தேசிய சபை வரவேற்கத்தக்கது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தேசிய சபையானது பாதிக்கப்பட்ட நாட்டை படிப்படியாக மீட்டுவரும் நிலையில் நீண்ட கால மற்றும் நடுத்தர நிலை பேறாண கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய சபை பங்காற்றும் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  பாராளுமன்றத்தில் நம்பிக்கை வெளியிட்டார்.

சபாநாயகர் மற்றும் அரச, எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்டு 9வது நாடாளுமன்றத்தில் 35உறுப்பினர்களைக் கொண்ட இத்தேசிய பேரவை தீர்வுகளைக் காண்பதற்காகவே அமைக்கப்படவுள்ளதாக தனது பாராளுமன்ற உரையில் அமைச்சர்  நேற்று (20) தெரிவித்தார்.

குறுகிய மற்றும் நீண்ட காலப் பொருளாதார நிலமைகளை சீர்படுத்தல், இணக்கப்பாடுகளை எட்டுதல், இளைஞர் யுவதிகளுடனான கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்கு ஊடாக தீர்வுகளைக் காண முனையும் .இப்பேரவை காணாமல் ஆக்கப்பட்டோர், காணி நிலங்கள் அரச நிறுவனங்களால் அளவிடப்படும் போன்ற தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் என மீன்பிடித் துறை அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் உரையாற்றுகையில்;:
நாட்டிற்கு பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பாகக் குறுகிய, நடுத்தர நீண்ட காலப் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்கான ஒரு பேரவை தேவைதானா என்று சிந்திக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், தெரிவித்தார்.

ஏற்கனவே பல குழுக்கள் துறைசார் மேற்பார்வைக் குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு, அரசாங்கக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் குழு ஆகிய குழுக்கள் நாட்டில் செயலிழந்துள்ளன.

ஆனால் சபாநாயகர், கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சின் தவிசாளர் போன்ற, 35 பேர் கொண்ட தேசிய சபை நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டங்களுக்கு 10 பேர் வந்தால் போதுமானது எனின் எதற்காக 35 பேரைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் வினவினார்.

அதற்குப் பதிலாக 50வீதமானவர்களாவது கூட்டங்களில் பங்குபற்ற வேண்டும் என வலியுறுத்தப்படாத வரை இந்தக் குழுவும் கலைந்து செல்வதற்கானது எனத் தோன்றுவதாக அவர் தெரிவித்தார். காணி அமைச்சருக்கே தமிழர் காணிகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் பிரதேசத்தில்; தொல்பொருளியல் திணைக்களத்தினால் அளக்கப்படுவது தெரியாது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.