யுபிஐ உடன் இணைக்கப்படும் ரூபே கிரெடிட் கார்டு.. 3 வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியா முறையின்படி யுபிஐ பண பரிமாற்றம் அதிகம் நடைபெறுகிறது என்பதும் ஏராளமான மக்கள் யுபிஐ முறையை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யுபிஐ பணப்பரிமாற்ற முறையில் ஒருசில கிரெடிட் கார்டுகளும் அனுமதிக்கப்பட்டன என்பதும் இதனால் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மூன்று வங்கிகளின் ரூபே கிரெடிட் கார்டுகள் மூலமும் யுபிஐ முறையில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

3 வருடத்தில் 9 லட்சம் சேமிக்கனுமா? இதோ உங்களுக்கான முத்தான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள், ரூபே கிரெடிட் கார்டை யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்று கூறப்படும் யுபிஐ நெட்வொர்க்கில் இணைப்பதை நேற்று உறுதி செய்தார். இதனால் ரூபே கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரிக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

3 வங்கிகள்

3 வங்கிகள்

யுபிஐ கட்டண தளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி தங்களுடைய ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப் ஆஃப் இந்தியா
 

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப் ஆஃப் இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் ரூபே கிரெடிட் கார்டுகளை யுபிஐ நெட்வொர்க்கில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருப்பதால் மிகுந்த பயனடைவார்கள் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப் ஆஃப் இந்தியா ( NPCI) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் வணிகர்கள் க்யூஆர் குறியீடுகள் போன்ற முறையையும் பயன்படுத்தி கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் புரட்சி

டிஜிட்டல் புரட்சி

யுபிஐ, யுபிஐ லைட் மற்றும் பாரத் பில்பே கிராஸ்-பார்டர் பில் பேமென்ட்ஸ் ஆகியவற்றில் ரூபே கிரெடிட் கார்டு அனுமதிக்கப்பட்டுள்ளதால், டிஜிட்டல் பேமெண்ட்ஸ் முறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல புதிய பயனர்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட்டுகளில் ஈடுபட இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றும், இதன் மூலம் உலகம் முழுவதும் 300 மில்லியன் பயனர்கள் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

These three banks Rupay credit cards link with UPI payments now!

These three banks Rupay credit cards link with UPI payments now! | யுபிஐ உடன் இணைக்கப்படும் ரூபே கிரெடிட் கார்டு.. 3 வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Story first published: Wednesday, September 21, 2022, 9:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.