வட்டி குறைவு, சேவைக்கட்டணம் இல்லை, கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை.. இப்படி ஒரு கடனா?

தனிநபர் கடன் உள்பட பல்வேறு கடன்கள் வங்கியில் வாங்கும்போது அதிக வட்டி மற்றும் சேவை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும் கிரெடிட் ஸ்கோர் கண்டிப்பாக சரிபார்க்கப்படும்.

ஆனால் எல்ஐசி பாலிசி மூலம் கடன் வாங்கினால் கிரெடி ஸ்கோர் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டுமின்றி குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம்.

அந்த வகையில் எல்ஐசி பாலிசி நீங்கள் வைத்திருந்தால் அதன் மூலம் எப்படி கடன் வாங்குவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

ஒரு லிட்டர் பெட்ரோல் 240 ரூபாய்.. பாகிஸ்தான் மக்கள் பரிதவிப்பு..!

எல்ஐசி பாலிசிக்கு கடன்

எல்ஐசி பாலிசிக்கு கடன்

உங்களிடம் எல்ஐசி இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால், அதற்கு எதிராக கடன் பெறலாம். இந்த கடனை கொடுப்பதற்கு முன் காப்பீட்டு நிறுவனம் உங்கள் நிலையை பார்ப்பதில்லை. மாறாக, காப்பீட்டு நிறுவனம் உங்கள் காப்பீட்டு பாலிசியை மட்டுமே பார்க்கிறது. உங்கள் காப்பீட்டு பாலிசி கடன் வழங்குவதற்கு ஏற்றதாக இருந்தால், நீங்கள் எளிதாகவும் விரைவாகவும் கடன் பெறலாம்.

எல்ஐசி பாலிசி கடன் வாங்குவது எப்படி?

எல்ஐசி பாலிசி கடன் வாங்குவது எப்படி?

நீங்கள் எல்ஐசியில் காப்பீட்டு பாலிசி வைத்திருந்தால், அதன் மீது எளிதாக கடன் பெறலாம். இந்த கடனுக்கான காப்பீட்டு பாலிசியை ரத்து செய்யவோ அல்லது சரண்டர் செய்யவோ தேவையில்லை. அத்தகைய கடனுக்கு தேவையான ஆவணங்கள் மட்டும் உங்களிடம் இருக்க வேண்டும். அதாவது முகவரி சான்று, அடையாள ஆவணங்கள் மற்றும் எல்.ஐ.சி பாலிசி பத்திரம் ஆகியவை இதில் அடங்கும்.

குறைந்த வட்டி
 

குறைந்த வட்டி

எல்.ஐ.சி பாலிசிக்கு எதிராக கடன் வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. ஒன்று, வங்கிகளின் தனிநபர் கடனை விட இது மலிவானது. அதே நேரத்தில், இந்த வகை கடனில் சேவை கட்டணம் உள்பட எந்தவித மறைமுக கட்டணமும் இல்லை. அதுமட்டுமின்றி இந்த வகை கடனுக்கு கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை.

எவ்வளவு கடன் வாங்கலாம்?

எவ்வளவு கடன் வாங்கலாம்?

நீங்கள் எல்ஐசியின் பாலிசிதாரராக இருந்தால், காப்பீட்டு பாலிசியின் சரண்டர் மதிப்பில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கடனாக பெறலாம். எல்ஐசி வழக்கமாக இந்தக் கடனை 10 சதவீத வட்டியில் வழங்கும். இது தவிர மிக குறுகிய காலத்தில் இந்த கடன் கிடைக்கும். பொதுவாக உங்களிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தால், 3 முதல் 5 நாட்களில் இந்தக் கடனை பெறலாம்.

கடனை திருப்பி செலுத்த வேண்டுமா?

கடனை திருப்பி செலுத்த வேண்டுமா?

இந்தக் கடன் உங்கள் காப்பீட்டு பாலிசிக்கு பதிலாகக் கிடைக்கிறது. இதன் காரணமாக நீங்கள் தவணை முறையில் கடனை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வசதிக்கேற்ப இந்த கடனை திருப்பி செலுத்தலாம். ஒருவேளை திருப்பி செலுத்த முடியாவிட்டாலும் உங்கள் பாலிசியின் முதிர்வுத்தொகையில் கடன் தொகை கழித்து கொள்ளப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

You will get LIC policy loan with less interest and no service charge

You will get LIC policy loan with less interest and no service charge | வட்டி குறைவு, சேவைக்கட்டணம் இல்லை, கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை.. இப்படி ஒரு கடனா?

Story first published: Wednesday, September 21, 2022, 13:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.