இறந்த கேரக்டர்.. அடுத்த பாகத்துல நடிக்க பிளான் சொல்லி இருக்கேன்.. அப்புக்குட்டி எஸ்க்ளுசிவ்!

சென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் நடிகர் சிலம்பரசன், நடிகை சித்தி இத்னானி நடிப்பில் வெளிவந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்ற நடிகர் அப்புக்குட்டியும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

எங்க ஊருக்காரர் போல் சிம்பு

கேள்வி: வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்க வாய்ப்பு எப்படி கிடைத்தது?

பதில்: முதலில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் ஊர் பக்கத்தில் தான் நடைபெற்றது. நான் அங்கு திருவிழாவிற்கு சென்றபோது, நடிகர் சிம்பு எங்க ஊருக்காரர் போல் மாறியிருந்தார். உடம்பு இளைத்து இப்படி இருப்பார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும் எங்க ஏரியா குறித்த படம் என்பதையும் தெரிந்து கொண்டேன். பின்பு நேரடியாகவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் சென்று வாய்ப்பு கேட்டேன். கண்டிப்பாக பார்க்கலாம் என்று கூறினார். பிறகு சென்னை வந்து விட்டேன். ஒரு நாள் இயக்குநர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்துது. நான் ஏற்று நடித்துள்ள சரவணன் கதாபாத்திரத்திற்கு சரியாக வருவேனா என்பது குறித்த ஒரு டெஸ்ட் நடைபெற்றது. நான் சரியாக இருந்த காரணத்தினால் இந்த வாய்ப்பு கிடைத்தது என்றார். மேலும் அவர் கூறுகையில், பல ஆண்டுகளாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு புகைப்படங்கள் அனுப்பியுள்ளேன். அந்த கனவு இந்த படத்தில் தான் நிறைவேறியுள்ளது என்றார்.

கஷ்டப்பட்டேன்

கஷ்டப்பட்டேன்

கேள்வி: படத்தின் வசனம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: படத்தில் கதைக்கான வசனம் தான் இருந்தது. மேலும் வசனங்கள் அர்த்தமானதாகவும் இருந்தது. நமக்கு ஏற்றது போல் வசனத்தை மாற்றி பேச முடியாது. நான் இந்த படத்தில் கஷ்டப்பட்டு தான் வசனங்கள் பேசியுள்ளேன். இது போன்று கதாபாத்திரங்கள் பெரிய படங்களில் அமைந்தால் கண்டிப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கமர்ஷியல் படங்களில் நடிப்பதற்கும், இது மாதிரியான படங்களில் நடிப்பதற்கும் வித்தியாசம் அதிகமாக இருக்கிறது என்றார்.

 மூன்று நடிகைகள்

மூன்று நடிகைகள்

கேள்வி: நடிகை சித்தி இத்னானி குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இவர்களை தேர்வு செய்வதற்கு முன்பு மூன்று பேர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தனர். அதாவது சிம்புவும், நானும் ஜட்டி வாங்கும் காட்சியில் நான் பேசுகின்ற வசனம் எதார்த்தமாக அமைந்திருக்கும். இந்த காட்சி தான் நடிகையை தேர்வு செய்யும் காட்சி. அந்த காட்சியும், வசனமும் தான் என்னை நடிக்க வைத்தது.

 அழகி, சேது படம் மாதிரி....

அழகி, சேது படம் மாதிரி….

கேள்வி: கேமராமேன் குறித்து…

பதில்: கேமராமேன் சித்தார்த் நன்றாக வேலை பார்த்துள்ளார். ஸ்பாட்டில் பேச மாட்டார். பேசதாவர்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கும். சிங்கிள் ஷாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டார். இயக்குநர், டெக்னிஷியன்களை தேர்வு செய்தது ரொம்ப அருமை. படத்தை பொறுத்தவரை எல்லோரும் நீளம் என்கிறார்கள். அது கிடையாது. அழகி, சேது படத்தை நிறுத்தி நிதானமாக பார்க்க வேண்டும். அந்த மாதிரியான படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் மூலம் பல பேருக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றார்.

 சூழ்நிலை தான் காரணம்

சூழ்நிலை தான் காரணம்

கேள்வி: நீங்கள் ஏற்று நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: சிம்புவின் மனைவியை நான் கடத்தி செல்லும்பொழுது, நான் பேசுகின்ற வசனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒருத்தன் திடீரென்று மாறுவது என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒருவன் எல்லா இடத்திலும் நல்லவனாக இருக்க முடியாது, சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி. சில சூழ்நிலையில் கெட்டவனாக பரிணாமக்கூடிய நிலையும் வரும். நான் ஏற்ற சரவணன் கதாபாத்திரமும் கதைப்படி எனக்கு நியாயகமாக இருந்தது. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் முதலில் சுந்தரபாண்டியனும், தற்போது வெந்து தணிந்தது காடு படத்திலும் நடித்துள்ளதாக தெரிவித்தார்.

 ஏற்றுக் கொள்ள முடியவில்லை

ஏற்றுக் கொள்ள முடியவில்லை

கேள்வி: படத்தில் நீங்கள் இறந்து விடுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இந்த படத்தில் நான் இறந்து விடுகிறேன் என்ற தகவல் எனது நண்பர்களுக்கு தெரிய வரும்பொழுது, இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்க வேண்டாம் என்றார்கள். ஒரு சிலரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அது தான் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. ஆனால் இந்த கிளைமாக்ஸ் காட்சியை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன். ஒரு வருத்தம் என்னவென்றால், படத்தின் அடுத்த பாகத்தில் என்னால் நடிக்க முடியாது என்பது மட்டும் தான். அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அதற்கான வழியை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.

வீட்டில் இருக்க முடியாது

கேள்வி: தேசிய விருது பெற்றுள்ள நீங்கள் சில படங்கள் தோல்வியடைவது குறித்து…

பதில்: நன்றாக இருக்கும் ஒரு கதைக்கு வெற்றி கிடைக்கிறது. சரியில்லை என்றால் தோல்வி அடைகிறது. அதற்காக நல்ல கதை வரட்டும் என்பதற்காக வீட்டில் இருக்க முடியாது. படங்கள் வரும்போது நடிக்க வேண்டியதாகிறது. அதற்காக மோசமான கதையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. சில படங்களில் நம்பி தான் வேலை செய்கிறோம். எதிர்பாராத விதமாக சிலநேரங்களில் தோல்வியை சந்திக்க நேரிடுகிறது. எனவே எல்லா கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க வேண்டும் என்றார்.

 கைவசம் 8 படங்கள்

கைவசம் 8 படங்கள்

கேள்வி: உங்களது லட்சியம் என்ன?

பதில்: சினிமாவுக்கு வந்ததை நான் சந்தோஷமாக நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது. வெற்றி கிடைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்தால் மட்டுமே கதாபாத்திரம் பேசப்படுகிறது. கதையுடன் காமெடி செய்யும்போது காமெடி என்றுமே அழியாது. நல்ல படங்கள் நிறைய செய்ய வேண்டும். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. வெந்து தணிந்து காடு படத்தில் நடித்ததை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளது எனக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ளது என்றார். மேலும் தற்போது நான் நடித்த வாழ்க விவசாயி படம் இரண்டு மாதத்தில் ரீலீசாகும். தற்போது 8 படங்களிலும் நடித்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/oHJWAg-vANQ இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.