டிசிஎஸ் ஊழியர்களே ஆபீஸ் கிளம்புங்க.. வாரம் 3 நாள் கட்டாயம்.. புதிய உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையிலும், கொரோனா தடுப்பு மருந்து அனைத்து ஊழியர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இயல்பான வர்த்தகக் கட்டமைப்புக்குத் திரும்ப டிசிஎஸ் நிறுவனமும் முடிவு செய்துள்ளது.

ஆனால் டிசிஎஸ் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

கடைசியில் டிசிஎஸ்-ம் அறிவித்தது.. ஐடி ஊழியர்கள் ஷாக்..!

டிசிஎஸ் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர துவங்கியுள்ள நிலையிலும், பெரிய வர்த்தக அணிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று டிசிஎஸ் நிர்வாக அனைத்து ஐடி ஊழியர்களுக்கும் முக்கியமான முடிவுடன் ஈமெயில் அனுப்பியது.

டிசிஎஸ் ஊழியர்கள்

டிசிஎஸ் ஊழியர்கள்

டிசிஎஸ் நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகள் பலமுறை டிசிஎஸ் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர அறிவுறுத்தியும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று அனுப்பிய மின்னஞ்சலில் அனைத்து ஊழியர்களும் (அணி, பதவி, ஆண், பெண், கிளையிட் என எவ்விதமான வித்தியசமும் இல்லாமல்) வாரத்தில் 3 நாள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

மேனேஜர்கள்
 

மேனேஜர்கள்

இதற்காக மேனேஜர்கள் எந்த ஊழியர்கள் எந்த நாளில் வர வேண்டும் என்பதற்காக Roster தயாரிப்பார்கள், அதைக் கட்டாயம் அனைத்து ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிர்வாக நடவடிக்கைகள்

நிர்வாக நடவடிக்கைகள்

இந்த விதிமுறைக்கு இணங்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டும் அல்லாமல் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப் பரிந்துரைக்கப்படும் என மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. அதாவது ஹெச்ஆர் பிரிவில் இருந்து வார்னிங் வரும், அதையும் மீறினால் பணிநீக்கம் செய்யப்படும் என்பதைத் தான் நிர்வாக நடவடிக்கைகள் எனக் குறிப்பிட்டு உள்ளது.

25/25 மாடல்

25/25 மாடல்

டிசிஎஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து அலுவலகத்திலும் 25/25 மாடலை கொண்டு வர வேண்டும் என்பதை முக்கிய இலக்காக வைத்துள்ளது.

80 சதவீத ஊழியர்கள் WFH

80 சதவீத ஊழியர்கள் WFH

டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது வெறும் 20 சதவீத ஊழியர்கள் அதுவும் மூத்த அதிகாரிகள் மட்டுமே அலுவலகத்திற்கு வருகின்றனர். மற்ற அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

300 ஊழியர்கள் பணிநீக்கம், விப்ரோ அதிரடி முடிவு.. விஸ்வரூபம் எடுக்கும் Moonlighting பிரச்சனை..!300 ஊழியர்கள் பணிநீக்கம், விப்ரோ அதிரடி முடிவு.. விஸ்வரூபம் எடுக்கும் Moonlighting பிரச்சனை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TCS ends Work from home in Strict manner; TCS employees should work from office Weekly 3 days compulsorily

TCS employee’s attention, Work from home ends in Strict manner; TCS employees should work from office Weekly 3 days compulsorily

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.