செம! திருப்பத்தூர் டூ மொரப்பூர் வரை.. 120 கிமீ வேகத்தில் பறந்த ரயில்! டம்ளர் தண்ணீர் கூட கொட்டவில்லை

திருப்பத்தூர்: தெற்கு ரயில் நேற்று முன்தினம் திருப்பத்தூர்-மொரப்பூர் வரையிலான பாதையில் ரயிலை சோதனை ஓட்டம் நடத்தியது.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஆய்வுக்காக புதன்கிழமை சென்னையில் இருந்து தனி ரயில் மூலம் சேலம் வந்தார்.

வரும் வழியில் அவர் திருப்பத்தூர் முதல் மொரப்பூர் வரை 48 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றதை ஆய்வு மேற்கொண்டார்.

சோதனை

தெற்கு ரயில்வே சமீப நாட்களாக பல புதிய திட்டங்களை அறிவித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் மயிலாடுதுறையிலிருந்து திண்டுக்கல் வரை செல்லும் ரயிலையும், மதுரையிலிருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயிலையும் இணைத்து ஒரே ரயிலாக மாற்றியது. இதனையடுத்து மயிலாடுதுறையிலிருந்து செல்லும் ரயில் மதுரை வரை சென்று அங்கிருந்து செங்கோட்டை வரை செல்கிறது. தற்போது இதன் தொடர்ச்சியாக புதிய சோதனை ஒன்றை ரயில்வே துறை மேற்கொண்டிருக்கிறது.

2021 கிமீ வேகம்

2021 கிமீ வேகம்

அதாவது திருப்பத்தூர்-மொரப்பூர் ரயில் பாதையில், ரயிலை 120 கிமீ வேகத்தில் தென்னக ரயில்வே ரயிலை இயக்கி பரிசோதித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஆய்வுக்காக கடந்த புதன்கிழமை சென்னையில் இருந்து தனி ரயில் மூலம் சேலம் வந்தார். அப்போது வரும் வழியில் அவர் திருப்பத்தூர் முதல் மொரப்பூர் வரையிலான 48 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயிலை அதிகபட்ச வேகமான 120 கிமீ வேகத்தில் இயக்கி பரிசோதித்தார்.

விரைவில் புதிய பாதை

விரைவில் புதிய பாதை

இந்த பரிசோதனையின்போது டம்ளரில் தண்ணீரை வைத்திருந்தனர். அந்த தண்ணீர் கீழே கொட்டாமல் இருந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல புதிய திட்டங்களை தென்னக ரயில்வே முடித்து அதனை செயல்படுத்தி வருவதால் மக்கள் இதனை பாராட்டியுள்ளனர். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதைப்போல தருமபுரி-மொரப்பூர் ரயில் பாதையை விரைவில் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

வேண்டுகோள்

வேண்டுகோள்

ரயில் ஓட்டத்தை பரிசோதித்த பின்னர் மொரப்பூர் ரயில் நிலையத்தில் மல்லையா ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பேட்டியளித்த அவர், மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதைக்கான நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும் என கூறியுள்ளார். அதேபோல, மொரப்பூர் ரயில் நிலையத்தில் மஙக்ளூரு எக்ஸ்பிரஸ் மற்றும் பழநி எக்ஸ்பிரஸ் ஆகியவை நின்று செல்ல வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் மற்றும் வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.