ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்திய 2 வயர்லெஸ் சாதனங்கள் பதிவுகள் செய்தது என்ஐஏ!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜிபிஎஸ் கருவி படுத்திய இரண்டு வயர்லெஸ் சாதனங்களை பறிமுதல்! 

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பாப்புலர் பண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்பதற்கான சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  

தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிற மதம் சார்ந்த அமைப்புகளுடன் தொடர்பு உடைய நபர்களை கொலை செய்வது, கல்லூரி பேராசரின் கையை வெட்டியது போன்ற வன்முறை செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.

பிரபல நபர்கள் இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள், ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு, பொது சொத்துக்களை அழித்தல் போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு மக்கள் மனதை அச்சத்தை உருவாக்கும் வகையில் இந்த அமைப்பு செயல்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.

 இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் பேண்ட் ஆப் இந்தியா நிர்வாகி பர்கத்துல்லா வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஜிபிஎஸ் கருவி படுத்திய இரண்டு ஒயர்லெஸ் சாதனங்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

 பர்கத்துல்லா வெளிநாட்டில் இருந்து பணம் பெற வயர்லெஸ் சாதனைகளை பயன்படுத்தினாரா? அல்லது கடல்வழி பயணத்திற்காக ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தினாரா? என அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பரகத்துல்லா நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.