4 ஸ்டார் ஹோட்டலுக்கு இணையாக அறை கட்டணம்.. பெரிய மருத்துவமனைகளை விளாசும் CCI..!

இந்தியாவின் நியாய வர்த்தகக் கட்டுப்பாட்டு ஆணையமாக CCI அமைப்பின் நான்கு ஆண்டுக்கால விசாரணையில் உண்மை வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைச் சங்கிலி நிறுவனங்கள் தங்களது ஆதிக்கத்தைப் பயன்படுத்திப் போட்டி வர்த்தகச் சந்தை சட்டங்களை மீறி மருத்துவச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு மக்களிடம் இருந்து அதிக விலையை நிர்ணயம் செய்துள்ளது ஏமாற்றியுள்ளது.

இதற்கான அபராதம் எவ்வளவு தெரியுமா..?

டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!

 CCI அமைப்பு

CCI அமைப்பு

CCI அமைப்பு தனது விசாரணைகளின் முடிவுகளையும், பல்வேறு கேள்விகளுக்குமான விளக்கத்தையும் அப்பல்லோ மருத்துவமனைகள், மேக்ஸ் ஹெல்த்கேர், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை, பாத்ரா மருத்துவமனை & மருத்துவ ஆராய்ச்சி மற்றும் செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனை ஆகியவற்றிடம் கேட்டுள்ளது.

10 சதவீத தொகை அபராதம்

10 சதவீத தொகை அபராதம்

இதற்கான விளக்கத்தைக் கேட்ட பின்பு CCI அமைப்பு இந்த மருத்துவமனைகளில் கடந்த 3 வருடங்களுக்கான சராசரி விற்றுமுதல் அதாவது turnover தொகையில் 10 சதவீத தொகை வரையில் அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பல்லோ மருத்துவமனை
 

அப்பல்லோ மருத்துவமனை

இதன் படி அப்பல்லோ மருத்துவமனை நிறுவனம் கடந்த 3 வருடத்தின் சராசரி turnover தொகை 12,206 கோடி ரூபாய், இதேபோல் போர்டிஸ் turnover தொகை 4,834 கோடி ரூபாய். இதில் 10 சதவீதம் என்றால் பெரும் தொகை அபராதமாக இருக்கும், இது இந்நிறுவனங்களின் பங்கு விலையை அதிகளவில் பாதிக்கும்.

NCR பகுதி

NCR பகுதி

NCR பகுதியில் இயங்கும் இந்த மருத்துவமனை சங்கிலிகளின் 12 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கிளைகளில் அறை கட்டணம், மருந்துகள், மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவச் சாதனங்கள் மற்றும் நுகர்பொருட்களுக்கு “நியாயமற்ற மற்றும் அதிகப்படியான விலைகளை” வசூலிப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாக CCI அமைப்பின் டைரக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

 அறை வாடகை

அறை வாடகை

சில மருத்துவமனை அறை வாடகைகள் 3-நட்சத்திர மற்றும் 4-நட்சத்திர ஹோட்டல்களால் வசூலிக்கப்படுவதை விட அதிகமாக வசூலித்துள்ளது. இந்த 12 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கிளைகளில் 6 மேக்ஸ் ஹெல்த்கேர் கிளைகள், 2 போர்ட்டீஸ் மருத்துவமனை உடையது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Apollo Hospitals, Max, fortis chains charged excessive pricing; 4 year CCI investigation finding

Apollo Hospitals, Max, fortis chains charged excessive pricing; 4 year CCI investigation finding

Story first published: Friday, September 23, 2022, 17:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.