தமிழ்நாட்டில் ஜெஸ்சூர்யாஸ், கேரளா-வில் பிஸ்மி.. முகேஷ் அம்பானி அதிரடி திட்டம்..!

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது என அனைவருக்கும் தெரியும், ஆனால் சமீபத்தில் தென்னிந்த வர்த்தகத்தைக் கைப்பற்ற அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ரிலையன்ஸ் ரீடைல் ஒருபக்கம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வரும் நிலையில், கடைகள் வாயிலான வர்த்தகம் கொரோனா தொற்றுக்குப் பின்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் இரு பிரிவிலும் விரிவாக்கம் செய்யத் துவங்கியுள்ளது.

இதற்காகக் கேரளாவில் ஒரு ரீடைல் விற்பனை நிறுவனத்தை வாங்கியுள்ளது ரிலையன்ஸ் ரீடைல்..!

சூப்பர் சான்ஸ்.. தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இனியும் குறையுமா?

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் கேரளாவில் இருக்கும் பிஸ்மி என்னும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை நிறுவனத்தைக் கைப்பற்றும் பேச்சுவார்த்தையில் நெருங்கியுள்ளது. இதில் ரிலையன்ஸ் ரீடைல் வெற்றி பெறும் பட்சத்தில் தென்னிந்தியாவில் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.

பிஸ்மி

பிஸ்மி

பிஸ்மி கேரளாவில் 30 பெரிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹைப்பர்மார்கெட்க கடைகளை வைத்து, அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது. இந்த நிறுவனத்தையும் அதன் வர்த்தகத்தையும் மொத்தமாகக் கைப்பற்றி ரிலையன்ஸ் தனது ரீடைல் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.

தீபாவளி
 

தீபாவளி

இந்தப் பேச்சுவார்த்தை தீபாவளிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள தொழிலதிபர் VA அஜ்மல் குடும்பத்தால் நிர்வாகம் செய்யப்படும் இந்த மிஸ்மி வருடத்திற்கு 800 கோடி ரூபாய் அளவிலான வருவாயை ஈட்டி வருகிறது.

600 கோடி ரூபாய் மதிப்பீடு

600 கோடி ரூபாய் மதிப்பீடு

இந்த நிலையில் மஸ்மி வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் 600 கோடி ரூபாய் அளவிலான மதிப்பீட்டை அஜ்மல் குடும்பம் எதிர்பார்க்கிறது. ஆனால் ரிலையன்ஸ் ரீடைல் மிகவும் குறைவான தொகையைக் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஜெய்சூர்யாஸ் கடைகள்

தமிழ்நாட்டில் ஜெய்சூர்யாஸ் கடைகள்

ரிலையன்ஸ் ரீடைல் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஜெய்சூர்யாஸ் கடைகளைச் சுமார் 152 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது மறக்க முடியாது, இதைத் தொடர்ந்து தென்னிந்திய வர்த்தகச் சந்தைக்குள் நுழைய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் தீவிரமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance Retail talks with Kerala’s Bismi to acquire; Big Announcement before diwali

Reliance Retail talks with Kerala’s Bismi to acquire; Big Announcement before diwali

Story first published: Monday, September 26, 2022, 11:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.