பணக்கார சாமிதான்… அதுக்காக இவ்வளவா? மலைக்க வைக்கும் திருப்பதி கோயில் சொத்து மதிப்பு!

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக திகழும் திருப்பதியில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வருகைதரும் ஏழுமலையான் பக்தர்களால் ஆண்டுதோறும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதன் பயனாக, ஏழுமலையான் கோயில் உண்டியலும் நாள்தோறும் நிரம்பி வழிந்த வண்ணமே உள்ளது.

பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகளின் மதிப்பை கணக்கிட்டால் மட்டும் தேவஸ்தானத்துக்கு நாள்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்து வருகிறது.

உலகிலேயே பெரிய பணக்கார சாமி என்று சொல்லும் அளவுக்கு ஏழுமலையானுக்கு கோடிக்கணக்கில் குவிந்துவரும் உண்டியல் காணிக்கை மட்டுமின்றி, பல்வேறு கட்டண தரிசனங்கள், லட்டு விற்பனை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடியை ஏலம் விடுவது, தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்கும் விடுதி, திருமணமண்டங்தகள் மூலம் கிடைக்கும் வருவாய் என, பல வழிகளில் தினமும் கோடிக்கணக்கில் வருவாய் குவிந்து வருகிறது.

இந்த பணத்தை கொண்டு, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விட்டுமனை, நிலம் போன்ற அசையா சொத்துகளை தேவஸ்தான நிர்வாகம் வாங்கி குவித்துள்ளது. சுமார 950 எண்ணிக்கையிலான அசையா சொத்துகளின் இன்றைய மதிப்பு 85, 705 கோடி ரூபாய் என்று மலைக்க வைக்கும் தகவலை தெரிவித்துள்ளது தேவஸ்தான நிர்வாகம்.

இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அசையா சொத்துகள் இருப்பதாகவும், இவை குறித்த விவரம் கடந்த மூன்றாண்டுகளாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருவதாகவும் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.