பாதுகாப்பு வலயம்: ஜனாதிபதி நாடு திரும்பிய பின் மீள் ஆய்வு

தற்பொழுது வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் தொடர்பில் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் மீள் ஆய்வு செய்து அதனை தொடர்ந்து முன்னெடுப்பதா? இல்லையா? என்பது குறித்து அல்லது சில பகுதிகளை நீக்குவதா? என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று பதில் பாதுகாப்பு அமைச்சரும், இராஜாங்க அமைச்சருமான பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பொதுமக்களால் வழமைபோன்று செய்றபடுவதற்கு இடமுண்டு என்றும் குறிப்பிட்டார்.

அரச பாதுகாப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.இந்த ஊடக சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தினித் திந்தக கருணாரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

“இருப்பினும் சட்டத்திற்கு எதிரான வகையில் செயற்படுவதற்கு எவருக்கும் இடமில்லை” என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு வலயம் தொடர்பில் எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை என்றும், வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

தற்போதையய நிலையில் அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்படுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்களின் நல்வாழ்க்கைகாக சிரமமான சூழ்நிலையில் முன்னோக்கிய பயணத்தை திசை திருப்புவதற்கு எவருக்கும் இடமளிக்க வேண்டாம் என்றும் தாம் பொதுமக்களை கேட்டுக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய சூழ்நிலையில் பிளவுபட்டு செய்றபடுவதற்கு பதிலாக ஒன்றிணைந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று பதில் பாதுகாப்பு அமைச்சரும், இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.