யூ டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு: புதுச்சேரியில் சிறுவன் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுச்சேரி: ‘யூ டியூப்’ பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து புதுச்சேரி வியாபாரி வீட்டில் வீசிய வழக்கில், சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

latest tamil news

புதுச்சேரி, லாஸ்பேட்டை, பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் பரமசிவம்,50; சண்டே மார்க்கெட் வியாபாரி. இவருக்கு, மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.கடந்த ஜூலை 20ம் தேதி, இவரது வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.அதில், பரமசிவத்தின் 2வது மகன் விக்கிக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.

இதனடிப்படையிலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். லாஸ்பேட்டை, நெருப்புக்குழி, ராமதாஸ் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. நேற்று முன்தினம் அச்சிறுவனை கைது செய்து, விசாரித்தனர்.

அதில், பரமசிவம் மகன் விக்கியும், இந்த சிறுவனும் நண்பர்களாக பழகியுள்ளனர். சிறுவனின் தாய் அப்பகுதியில் கட்டட வேலைக்கு செல்வது வழக்கம். அங்கு, கட்டட கான்ட்ராக்டர் ஒருவருக்கும், சிறுவனின் தாய்க்கும் தவறான உறவு இருப்பதாக, விக்கி தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இதையறிந்த சிறுவன், விக்கியை தட்டிக் கேட்டார். பின்னர், அவரை மிரட்ட முடிவு செய்து, நாட்டு வெடிகுண்டை சிறுவன் தயாரித்து பரமசிவம் வீட்டு மீது வீசியது தெரியவந்தது.அதை தொடர்ந்து சிறுவன், சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப் பட்டார்.பரமசிவம் வீடு அமைந்துள்ள பகுதியில் காங்., எம்.எல்.ஏ., வைத்திய நாதன் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

latest tamil news

‘யூ டியூப்’ பார்த்து

வெடிகுண்டு தயாரிப்புசண்டே மார்க்கெட் வியாபாரி மகன் விக்கியை பழிவாங்க நினைத்த சிறுவன், தனது மொபைல் போன் ‘யூ டியூப்’ பில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என பார்த்துள்ளார்.வீட்டில் கடந்தாண்டு தீபாவளியின் போது வாங்கிய பட்டாசுகள் மற்றும் அரியாங்குப்பத்தில் இருந்து வெடி மருந்துகளை அவர் வாங்கியுள்ளார். பின், லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நாட்டு வெடிகுண்டை தயார் செய்து எடுத்துச் சென்றது, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.