ரூ.25 கோடி பரிசு விழுந்தும் நிம்மதியில்லை.. லாட்டரியில் வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுனர் வருத்தம்..ஏன்?

கேரளாவில் அரசு அனுமதியோடு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி லாட்டரி விற்பனை நடைபெற்று வந்ததில். இதில் கேரளாவில் ஆட்டோ ஒட்டுனர் ஒருவருக்கு 25 கோடி ரூபாய் பரிசும் விழுந்தது.

ஆரம்பத்தில் பரிசு பெற்ற ஓட்டுனர் சந்தோஷத்தில் முதலில் கிடைத்த பரிசினை வைத்து வீடு கட்டுவேன். அதோடு கடன்களை திரும்ப செலுத்துவேன். என்னால் முடிந்த அளவு உறவினர்களுக்கு உதவுவேன் என கூறியிருந்தார்.

இதுல முதலீடு செய்யுங்க.. இதைமட்டும் செய்யாதீங்க.. ரூ.25 கோடி லாட்டரி பரிசு விழுந்தவருக்கு அட்வைஸ்!

நிம்மதியே இல்லை

நிம்மதியே இல்லை

ஆட்டோ ஓட்டுனருக்கு வரி பிடித்தம் போக 15 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. ஆரம்பத்தில் பெரும் சந்தோஷத்தில் இருந்த அந்த ஓட்டுனர், தற்போது மொத்த நிம்மதியையும் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதுவும் தன்னால் தனது சொந்த வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

 நாள் தோறும் பலரும் வருகிறார்கள்

நாள் தோறும் பலரும் வருகிறார்கள்

இது குறித்து பேசியவர் எனக்கு லாட்டரியில் பரிசு விழுந்ததை அடுத்து நாள்தோறும் உறவினர்கள் என் வீட்டுக்கு வந்து உதவுமாறு கேட்டு செல்கின்றனர். நான் வசிக்கும் இடத்தை கூட மாற்றி விட்டேன். ஆனாலும் தேடி கண்டுபிடித்து வந்து விடுகிறார்கள். இதனால் என் முழு நிம்மதியையும் இழந்து விட்டேன். எனக்கு பரிசு விழும் முன் வரையில் நாம் நிம்மதியாகத் தான் இருந்தேன். ஆனால் தற்போது இல்லை.

 வீட்டிற்கே போக முடியவில்லை
 

வீட்டிற்கே போக முடியவில்லை

நான் எனது வீட்டுக்கு கூட நிம்மதியாக போக முடியவில்லை. எங்கு பார்த்தாலும் என்னை பார்த்து ஓடி வந்து உதவி கேட்கிறார்கள். எனக்கு இன்னும் பணம் வரவில்லை என்று கூறினாலும் நம்ப மறுக்கிறார்கள். என் வீட்டில் அருகில் பலரும் வசிப்பதால், எல்லோரும் எங்கள் மீது கோபமாக இருக்கின்றனர். இதனால் எங்கள் நிம்மதியே போச்சு என மன வருத்தத்தில் உள்ளதாக கூறியுள்ளார் பரிசு பெற்ற அனூப்.

 கடனுக்காக விண்ணப்பம்

கடனுக்காக விண்ணப்பம்

திருவனந்தபுரத்தை சேர்ந்த அனூப் ஆட்டோ ஒட்டுனர். கடன் சுமை காரணமாக சமையல் வேலைக்கு மலேசியா செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக வங்கியிலும் கூட கடனுக்காக விண்ணப்பித்திருந்தார். அதற்கு வங்கி நிர்வாகமும் ஒப்புதல் அளித்த நிலையில், ஓணம் பம்பர் லாட்டரியில் பரிசு விழுந்தது.

 பரிசே கிடைத்திருக்க வேண்டாம்

பரிசே கிடைத்திருக்க வேண்டாம்

ஆரம்பத்தில் கிடைத்த பரிசினை வைத்து வீடு கட்டுவேன், கடன்களை திரும்ப செலுத்துவேன். என்னால் முடிந்த அளவு உறவினர்களுக்கு உதவுவேன், சொந்தமாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பிப்பேன் என கூறியிருந்தார்.ஆனால் இன்று தொடர்ந்து பலரும் கேட்டு வரும் உதவியினால், எனக்கு பரிசே கிடைத்திருக்க வேண்டாம் என நினைக்கிறேன் என வருத்தப்பட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Anoop, who won the prize of Rs 25 crore in Kerala, is sad that he has no peace since he got the prize

Anoop, who won the prize of Rs 25 crore in Kerala, is sad that he has no peace since he got the prize/ரூ.25 கோடி பரிசு விழுந்தும் நிம்மதியில்லை.. லாட்டரியில் வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுனர் வருத்தம்..ஏன்?

Story first published: Monday, September 26, 2022, 12:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.