Mars OR Venus: செவ்வாயை விட சுக்கிரன் மேல் விஞ்ஞானிகளுக்கு காதல் அதிகம்? ஏன்?

‘ஆண்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள், பெண்கள் சுக்கிரனில் இருந்து வந்தவர்கள்’ என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கலாம். இந்த பழமொழி தொடர்பான ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும், மனிதர்கள் வேறு கிரகத்திற்கு செல்வது என்றால், முதலில் செல்ல வேண்டும்? அல்லது எந்த கிரகத்திற்கு முதலில் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நூற்றுக்கணக்கான எக்ஸோப்ளானெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, சுக்கிரன் கிரகம் தொடர்பான அறிவியல் ரீதியிலான ஆர்வமும் ஈர்ப்பும் அதிகமானது. இந்த கண்டுபிடிப்பு இந்த கிரகங்களில் மக்கள் வாழக்கூடியவை எவை என்ற கேள்வியை எழுப்புகிறது. இப்போது, ​​விஞ்ஞானிகள் சுக்கிரன் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.

உண்மையில், சுக்கிரன் கிரகம் அதிக சூடு கொண்டது, ஈயத்தை உருக்கும் அளவுக்கு சூடாக இருக்கும் இந்த கிரகமானது, சல்பூரிக் அமிலத்தின் மேகங்களின் தாயகமாகும். சல்பூரிக் அமிலம் என்பது, கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு இரசாயனமாகும். வளிமண்டலத்தில் அதிக அழுத்தத்தை கொண்டுள்ளது. இப்படி மனிதர்கள் வாழ்வதற்கு அரிதான சுக்கிரன் கிரகத்தில் வாழ்வது தொடர்பாக விஞ்ஞானிகள் ஏன் அதிக முனைப்புடன் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள் தெரியுமா?

மேலும் படிக்க | சனி கிரகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சனியின் வளையங்கள்

மற்றொரு கிரகத்திற்கு மனிதகுலத்தின் முதல் குழு பயணிக்கிறது என்பது தொடர்பான முனைப்பில், அறிவியலாளர்களின் முதன்மை மற்றும் பிரதானமான இலக்கு செவ்வாய் கிரகமாக இருந்தாலும், சுக்கிரனுக்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

சுக்கிரன் கிரகத்தை பூமியின் சகோதரி கிரகம் என்று வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்குக் காரணம், பூமி மற்றும் சுக்கிரன் இரு கிரகங்களுமே, நிறை, அடர்த்தி, அளவு என பல விதங்களில் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. இரு கிரகங்களுமே  இரண்டும் ஒரே நேரத்தில் உருவாகி ஒரே நெபுலாவிலிருந்து ஒடுங்கின என்பதால், பூமியும் சுக்கிரனும் சகோதரி கிரகங்களாக கருதப்படுகின்றன.

சூரியனிடமிருந்து அதே தூரத்தில் இருக்க முடியுமானால், பூமியைப் போலவே சுக்கிரனிலும் உயிரினங்கள் வாழ முடியும் என்று வானியலாளர்கள் நம்புகின்றனர். சூரிய மண்டலத்தின் மற்றொரு பகுதியில் இருப்பதால், அது நம்முடைய கிரகத்திலிருந்து மிகவும் மாறுபட்ட கிரகமாக மாறியுள்ளது என்பதுதான் பூமிக்கும் சுக்கிரனுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடாகும்.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கிக் காட்டிய MOXIE! செவ்வாயில் மனிதர்கள்?

கடந்த வாரம் பாரிஸில் நடந்த சர்வதேச விண்வெளி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் அறிக்கையின்படி, சுக்கிரனுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான காரணங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. முதலில், பூமியில் இருந்து சுக்கிரன் கிரகம் அருகில் உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு நமது கிரகத்தில் இருந்து கிளம்பினால், அங்கு சென்று திரும்ப, ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகும் என்றால், சுக்கிரனுக்கு சென்று திரும்ப ஒரு வருடம் மட்டுமே ஆகும்.

இரண்டாவதாக, கிரகத்தின் மேற்பரப்பில் நடப்பது என்ற விஷயத்தின் அடிப்படையில் பார்த்தால், சுக்கிரனின் தரையில் நடப்பது என்பது பகல் கனவாக இருக்கும் என்றாலும் அது நடந்தால் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.  அதே வேளையில், செவ்வாய் கிரகத்தை அடைவதற்கான முன்னோடியாக ஒரு நீண்ட ஆழமான விண்வெளிப் பயணத்தின் இன்றியமையாத அனுபவத்தை சுக்கிரன் கிரகம் கொடுக்கலாம்.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளிவட்ட புகைப்படம்! நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் சாதனை

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த டாக்டர் நோம் ஐசென்பெர்க், சுக்கிரன் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்வதற்கு ஆதரவு தெரிவிக்கும் வானியலாளர்களில் ஒருவர் ஆவார். சுக்கிரன் பூமிக்கு “தவறான” திசையில் இருந்தாலும், சிவப்பு கிரகத்தை அடைய தேவையான பயண நேரத்தையும் எரிபொருளையும் குறைக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், சுக்கிரனுக்கு செல்ல விரும்புபவர்கள் கூட, அதன் அசாத்தியத்தை மறுக்கவில்லை. “சுக்கிரன் கிரகம் என்பது, உண்மையில் செல்வதற்கான நல்ல இடம் இல்லை. நரக சூழல் கொண்டது என்பதோடு, மனிதர்களின் குழு சென்று ஆராய்ச்சி செய்வது என்பது கடுமையான வெப்ப சவால்களைக் கொண்டதாக இருக்கும்” என்று UCL இன் முல்லார்ட் விண்வெளி அறிவியல் ஆய்வகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரூ கோட்ஸ் கூறுகிறார்.

சுக்கிரன் விஞ்ஞான ஆராய்ச்சிகளின் விருப்பங்களின் பிரதான மையமாக இருந்தாலும், அதற்கான சாத்தியங்கள் குறைவுதான். நூற்றுக்கணக்கான எக்ஸோப்ளானெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, வீனஸைப் பற்றிய அறிவியல் ஆர்வம் வளர்ந்தது, இந்த கண்டுபிடிப்பானது, இந்த கிரகங்களில் எத்தனை வாழக்கூடியவை என்ற கேள்வியை எழுப்புகிறது.  

மேலும் படிக்க | Galactic Slam: விண்கல்லில் மோதியது டார்ட் ஸ்பேஸ் கிராப்ட்! வெற்றியா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.