அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம்: நாளை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை,பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ் என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் இரண்டாம் இடத்திலும் உள்ளது. தொழில்நுட்பத்தில் இது புரட்சியாக இருக்கும், டிஜிட்டல் உலகில் இனி இந்தியாவும் பெருமளவில் பங்கு கொள்ள இந்த 5ஜி சேவை உதவும். உலக நாடுகளுடன் தொழில்துறையில் இனி நாமும் போட்டியிடலாம். தொலைத்தொடர்புத் துறை மற்றும் இந்தியாவின் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் கூட்டாக இணைந்து ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்ப மன்றமாக கருதப்படும்.

இதில் தற்போது நாளை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 5 ஜி சேவையை தொடங்கப்படவுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரதமர் மோடி, இந்தியாவில் 5G சேவைகளை தொடங்கி வைக்கிறார். என்றும், ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்தியா மொபைல் காங்கிரஸில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது என பதிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஒரு தொழில்துறை நிகழ்வில் உரையாற்றிய அஸ்வினி வைஷ்ணவ், 5G சேவையின் பயணம் மிகவும் உற்சாகமாக இருக்கும். மேலும் பல நாடுகள் 40 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை விரிவுப்படுத்த பல வருடங்கள் எடுத்து கொண்டன. ஆனால், நாங்கள் இலக்கு வைத்துள்ளோம் என்று குறுகிய காலத்தில் 80 சதவீதம் விரிவுப்படுத்த இலக்கை வழங்கியுள்ளது அரசு. மற்றும் மிகக் குறுகிய காலக்கட்டத்தில் கண்டிப்பாக குறைந்தபட்சம் 80 சதவீதத்தையாவது ஈடுகட்ட வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.