கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு!

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியானது, பல்கலைக்கழக  துணை வேந்தர் கீதாலட்சுமி  தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 14 அரசுக் கல்லுரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. வேளாண்மை பல்கலை மற்றும்  உறுப்பு கல்லுரிகளில் 2,148 இடங்களும், இணைப்புக்கல்லுரிகளில் 2,337 இடங்களும் உள்ளன.

இந்த கல்லுரிகளில் 12 இளநிலை பட்டப்படிப்புகளுக்கனா விண்ணப்பங்கள்,  கடந்த ஜுன் மாதம் முதல் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தன.   இதற்காக மொத்தம் 37,766 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் வெளிமாநிலத்தை சேர்ந்த 800 மாணவர்களும் அடங்குவர்.

இந்த நிலையில், இளநிலை வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை, பல்கலை. துணை வேந்தர் கீதாலட்சுமி இன்று வெளியிட்டார். இதில் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து 7 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். 199.5 மதிப்பெண்கள் 14 பேரும், 199 மதிப்பெண்கள் 3 பேரும் எடுத்துள்ளனர்.

ஜி.கோபி, சுபஸ்ரீ, கார்த்திக் ராஜா, தாரணி செங்கோட்ட வேலு, முத்துபாண்டி, ஹரிணிகா, ராஜா ஐஸ்வரிய காமாட்சி ஆகியோர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு, மருத்துவ கலந்தாய்வு முடிந்து பின்னர் நடத்தப்படும் எனவும், ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக நேரில் வர வேண்டும் எனவும் வேளாண்மை பல்கலை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.