ஓசி வேண்டாம்… பூதாகரமாகும் விவகாரம்… கேள்வி கேட்க தொடங்கும் பெண்கள்…

சமீபத்தில் அமைச்சர் பொன்முடி பெண்கள் இலவச பயணம் குறித்து சர்ச்சையாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து கோவை மதுக்கரை பகுதியில் அரசு பேருந்தில் அப்பகுதியைச் சேர்ந்த துளசி அம்மாள் பயணம் செய்தார். அப்போது அந்த மூதாட்டி, நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என்று கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணம் செய்தார்.

அந்த வீடியோவும் வைரலான நிலையில் மூதாட்டியை அப்படி செய்ய தூண்டிவிட்டதாக அதிமுகவைச் சேர்ந்த 4 பேர் மீது மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வேறொரு பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்கள் சிலர் கண்டக்டரிடம், நாங்கள் ஓசியில் போக மாட்டோம் எனக்கூறி காசு கொடுத்து டிக்கெட் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனை அதிமுக அதிமுக தமது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், வாக்குவாதம் செய்யும் பெண்கள், அந்த மூதாட்டி கேட்டது நியாயம் தான்… நாங்கள் காசு கொடுக்கிறோம் நீங்க டிக்கெட் கொடுங்க என்றும் ரொம்ப நேரமா நிக்கிறோம் மூணு பஸ்ஸும் நிக்கல நாலாவது பஸ்ஸுல இப்போ வரோம்… எங்களை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு? விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சு… எத்தனை நாட்கள் இலவசம், இலவசம்னு ஏமாத்துவீங்க? எங்களை பார்த்து ஓசியில போறீங்கன்னு சொல்லறீங்க…. எங்களுக்கு அவசியம் இல்ல.. ” என்று அந்த பெண்கள் ஆவேசமாக பேசியுள்ளனர். தமிழகத்தில் இந்த சம்பவம் தற்போது பூதாகரமாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.