5000 முதல் 5500 ரஷ்ய வீரர்களை சுற்றி வளைத்தது உக்ரைனிய படை: முக்கிய நகரை விடுவித்து அசத்தல்!


ரஷ்ய படைகளை சுற்றி வளைத்து, உக்ரைனின் கிழக்கு பகுதியான லைமன் நகரை மீட்ட உக்ரைனிய படை.

இந்த வெற்றி டான்பாஸ் பகுதியை விடுவிப்பதற்கான அடுத்த நகர்வு என உக்ரைன் அறிவிப்பு.

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு உக்ரைனிய பகுதியான லைமன் நகரை உக்ரைனிய படைகள் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட எட்டாவது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரின் தொடக்கத்தில் ரஷ்ய படைகள் கைப்பற்றி இருந்த பகுதிகளை தற்போது உக்ரைனின் படைகள் தாக்குதல் நடத்தி மீட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சனிக்கிழமையான இன்று 5000 முதல் 5500 ரஷ்ய வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கிழக்கு உக்ரைனிய நகரமான லைமன்(lyman) பகுதியை உக்ரைனிய படைகள் சுற்றி வளைத்து மீட்டெடுத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நகரத்தின் நுழைவு வாயிலில் உக்ரைனிய வீரர்கள் தங்கள் நாட்டு கொடியை பறக்க விட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

உக்ரைனிய வீரர்களின் இந்த மீட்பு தாக்குதல் வெற்றியானது, உக்ரைனின் முக்கிய நான்கு நகரங்களை ஜனாதிபதி புடின் ரஷ்யாவுடன் இணைப்பதாக அதிகாரப்பூர்வ அறிவித்ததை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலில், கிழக்கு உக்ரைனிய நகரமான லைமனில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.

5000 முதல் 5500 ரஷ்ய வீரர்களை சுற்றி வளைத்தது உக்ரைனிய படை: முக்கிய நகரை விடுவித்து அசத்தல்! | Ukraine Advance On Lyman After Putins Annexationshutterstock

கிழக்கு உக்ரைனிய பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் serhii cherevatyi தெரிவித்துள்ள தகவலில், லைமன் வெற்றி முக்கியமானது, ஏனென்றால் டான்பாஸ் பகுதியை விடுவிப்பதற்கான அடுத்த நகர்வு.

கூடுதல் செய்திகளுக்கு: ராணிக்கு அடுத்து கல்லினன் வைர பதக்கம் யாருக்கு? ரகசியமாக வைக்கப்பட்டுள்ள உயில்கள்

இது கிரெமினா மற்றும் சீவிரோடோனெட்ஸ்க்கான மேலும் ஒரு வாய்ப்பாகும், அதுமட்டுமின்றி இந்த வெற்றி உளவியல் ரீதியாகவும் மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.