பணம் செலுத்தி யாரும் போட்டுக் கொள்ள மாட்டார்கள்; இலவச பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: தனியார் மருத்துவமனையில் யாரும் பணம் செலுத்தி போட்டுக் கொள்ள மாட்டார்கள். அதனால், இலவச பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அவகாசத்தை மத்திய அரசுநீட்டிக்க வேண்டும் என தமிழகசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சைதை வர்த்தகர் சங்கஅறக்கட்டளை திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் 285 கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்களை வழங்கினர்.

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திரு.வி.க.நகர் தொகுதி எம்எல்ஏ தாயகம்கவி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இயக்குநர் வெ.அமுதவள்ளி, மண்டலக் குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இணை இயக்குநர் வி.ஆர்.ஜெயலெட்சுமி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

விழா முடிவில், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று கர்ப்பிணிகளுக்குவேண்டுகோள் விடுக்கிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் சென்னைமாநகராட்சியில் சில பள்ளிகளில்மட்டும் தனியார் தொண்டு நிறுவனம்சார்பில் அட்சயபாத்திரம் என்றதிட்டம் மூலம் காலை உணவு வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில்காலை உணவுத் திட்டம் இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது.சென்னையில் தெரு நாய்களைகட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலாக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு நன்றாக உள்ளது. காய்ச்சல் தடுப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 3 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இலவச பூஸ்டர் தவணை கரோனா தடுப்பூசிக்கான கால அவகாசம் இன்றுடன் (நேற்று) முடிவடைகிறது. இதனால், கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும். பணம் செலுத்தி தனியார்மருத்துவமனைகளில் யாரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத் துறையிடம் வலியுறுத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.