உக்ரைனிய இளம் பெண்ணின் தலைக்கு மேல் பாய்ந்த ரஷ்ய ஏவுகணை: நடுங்க வைக்கும் உயிர் தப்பிய வீடியோ காட்சி!



செய்திகளை வீடியோ பதிவு செய்த உக்ரைனிய இளம் பெண்ணின் தலை மேல் பாய்ந்த ஏவுகணை.

கட்டிடத்தின் குப்பைகளால் தாக்கப்பட்டு நூலிழையில் உயிர் தப்பிய பெண்.

ரஷ்ய ஏவுகணை ஒன்று தனது தலைக்கு மேல் பாய்ந்து சென்று வெடித்த பயங்கரமான தருணத்தை உக்ரைனிய இளம் பெண் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

கிரிமியா பாலம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி தருவதற்காக ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனிய பகுதிகள் மீது தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தார்.

இதில் 8 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் 24க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர், இந்த தாக்குதலில் ரஷ்ய ஏவுகணை ஒன்று உக்ரைனிய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அலுவலகத்துக்கு அருகிலேயே தரையிறங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலைநகர் கீவ் மீதான முந்தைய போர் தாக்குதலை விட தற்போது அதிக மையப் பகுதிகளை ஏவுகணைகள் தாக்கி இருப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உக்ரைனிய தலைநகர் கீவ்வின் தெருவில் பயத்துடன் நடந்து சென்று கொண்டு இருக்கும் இளம் பெண்ணின் தலைக்கு மேல் ஏவுகணை ஒன்று கடந்து சென்று வெடித்து இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த இளம் பெண் தெருவில் நடந்து கொண்டே தனது தொலைபேசியில் செய்தியை பதிவு செய்து கொண்டு இருக்கும் போது ரஷ்ய ஏவுகணை ஒன்று அவரது தலைக்கு அருகில் கடந்து சென்று அருகில் உள்ள கட்டிடத்தின் மீது வெடித்து சிதறியதில், அங்கிருந்த பறக்கும் குப்பைகளால் தாக்கப்பட்டார்.

சிறிய இடைவேளையில் உயிர் தப்பித்து கொண்ட இளம் பெண் அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்கிய போது, அதிர்ச்சியடைந்து திகைத்துப் போயிருந்தார்.

உக்ரைன் ஊடகமான NEXTA இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது, மேலும் அதில் பெண் ஒருவர் கிய்வில் ஒரு வீடியோ செய்தியைப் பதிவு செய்து கொண்டிருந்தார் மற்றும் அப்போது வெடிக்கும் அலையால் தாக்கப்பட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் கொள்ளை மற்றும் கத்தி குத்து சம்பவம்: 25 வயது இளைஞர் கைது

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன், இழந்த பிரதேசத்தை மீட்டெடுக்கும் தாக்குதலைத் தொடர்ந்த பின்னர், அண்டை நாடான உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா சமீபத்தில் அதிகரித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.