கோஹினூர் சர்ச்சை வைரம் காரணமாக…ராணியின் கிரீடத்தை பெறுவதில் கமீலாவுக்கு சிக்கல்!


மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கமிலாவால் ராணி கிரீடத்தை அணிய முடியாமல் போகலாம்.


முடிசூட்டு விழாவில் கமீலா பிரமிக்க வைக்கும் அலங்காரத்தை அணிவார்.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தில் உள்ள வைரம் தொடர்பான சர்ச்சைகள் இருப்பதால் மன்னர் மூன்றாம் சார்லஸுன் முடிசூட்டு விழாவில் கமீலா அதை அணிய முடியாமல் போகலாம் என தெரியவந்துள்ளது.

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா மே 6ம் திகதி 2023 ஆம் ஆண்டு சனிக்கிழமை நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அதனுடனே மன்னர் சார்லஸ் அவரது மனைவி ராணி கன்சார்ட் கமீலாவும் முடிசூட்டப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோஹினூர் சர்ச்சை வைரம் காரணமாக…ராணியின் கிரீடத்தை பெறுவதில் கமீலாவுக்கு சிக்கல்! | Camilla Not Wear Crown Coronation Kohinoor DiamondALAMY

ஆனால் கமீலாவின் முடிசூட்டு விழா மன்னரின் முடிசூட்டு விழாவுடன் இணைந்து இல்லாமல் தனியாக மற்றும் எளிமையான விழாவில் மரியாதை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராணி எலிசபெத்தின் கிரீடத்தில் சர்ச்சைக்குரிய வைரம் இருப்பதால் மன்னரின் முடிசூட்டு விழாவில் கமீலா அதை அணிவதை நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீடத்தின் முன்புறத்தில் உள்ள சிலுவையில் வைக்கப்பட்டு இருக்கும் 105 காரட் கோஹினூர் வைரம், உலகின் மிகப்பெரிய வெட்டப்பட்ட வைரங்களில் ஒன்று, அதை சீக்கியர்களின் கடைசி பேரரசரான துலீப் சிங்கால் விக்டோரியா மகாராணிக்கு பரிசாக வழங்கப்பட்டது.

கோஹினூர் சர்ச்சை வைரம் காரணமாக…ராணியின் கிரீடத்தை பெறுவதில் கமீலாவுக்கு சிக்கல்! | Camilla Not Wear Crown Coronation Kohinoor DiamondGETTY

இந்த வைரம் உண்மையில் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வைத்திருந்த வைரம் 1849 ல் பிரிட்டனால் கையகப்படுத்தப்பட்டது.

இதனை தற்போது இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கோஹினூரின் உரிமையைக் கோரியுள்ளனர், அதிலும் குறிப்பாக இந்தியா அதை திரும்பப் பெறுவதற்கான உரிமை கோரியுள்ளனர்.

எனவே மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் ராணி கன்சார்ட் கமீலா, மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அணியாமல் தவிர்க்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது.

கோஹினூர் சர்ச்சை வைரம் காரணமாக…ராணியின் கிரீடத்தை பெறுவதில் கமீலாவுக்கு சிக்கல்! | Camilla Not Wear Crown Coronation Kohinoor DiamondPA

அரச வட்டாரங்களின் படி, நடந்து கொண்டிருக்கும் உரிமை தகராறு காரணமாக அடுத்த ஆண்டு ராணி மற்றும் மனைவி கமீலாவுக்கு கிரீடத்தை அணிவிப்பதில் குறிப்பிடதக்க பதற்றம் இருப்பதாக மெயில் தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: மன்னர் முடிசூட்டு விழாவில் “ஆபரேஷன் கோல்டன் ஆர்ப்” என்பது என்ன? இளவரசர் வில்லியம் முக்கிய பங்கு

ராட்சத வைரமானது பிரிக்கக்கூடிய பிளாட்டினம் மவுண்டில் வைக்கப்பட்டிருப்பதால், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு கிரீடத்திலிருந்து அகற்றப்படலாம், அல்லது எளிமையான கொரோனெட்டுக்கு ஆதரவாக அது தவிர்க்கப்படலாம் என தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.