பிக்பாஸ் செல்லும் முன் மைனா நந்தினி பேசிய வீடியோ

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் சர்பிரைஸாக மைனா நந்தினி போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் கலந்து கொள்வார் என முன்பிருந்தே பேச்சுகள் அடிபட்டது. இதனால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்ற கேள்வி இருந்தது. எப்போதும் சர்பிரைஸ் கொடுப்பதுபோல், இந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக என்டிரியாகியுள்ளார்.

அவரை வரவேற்ற கமல்ஹாசன், சிறப்பு போட்டியாளர் எனக்கூறி வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். மைனா வீட்டிற்குள் சென்றதும் போட்டியாளர்கள் உற்சாகமடைந்தனர். மைனாவின் நீண்ட நாள் தோழியான ரக்சிதா அவரை பார்த்ததும் உற்சாகமடைந்து, கட்டியணைத்து வரவேற்றார். இப்போது, அவரும் ஒரு பிக்பாஸ் போட்டியாளராக வீட்டில் இருக்கும் நிலையில், மைனா நந்தினி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ரசிகர்கள் இதுவரை கொடுத்த ஆதரவுக்கு நன்றி, இப்போது கொடுக்கும் ஆதரவுபோல் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகும் எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ லவ்யூ செல்லக்குட்டீஸ், நான் பிக்பாஸ் போறேன் என உற்சாகமாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தான் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. வீட்டிற்குள் சென்றதும் தன்னுடைய வழக்கமான காமெடி அரட்டையை தொடங்கியிருக்கிறார் மைனா. இந்தவாரம் அவருடைய பெயர் நாமினேஷன் லிஸ்டில் இருக்காது. அடுத்தவாரம் இவர் விளையாடுவதை பொறுத்து இடம்பெறலாம், இடம்பெறாமலும் போகலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.