Whatsapp புதிய வசதிகள் விரைவில் வெளியாகும்! முக்கிய பிரீமியம் மற்றும் எடிட்டிங் வசதிகள்

Whatsapp நிறுவனம் புதிதாக பல புதிய அப்டேட்களை வழங்கவுள்ளது. அதில் முக்கிய மேம்பாடுகளாக கூடுதல் நபர்களை கொண்ட whatsapp குழு, ஸ்க்ரீன் ஷாட் வசதி, ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோ வசதி, ஆவணங்களை பகிர்தல் போன்ற வசதிகளும் இடம்பெறவுள்ளன.

மேலும் புதிதாக Whatsapp Premium வசதியையும் அதன் Whatsapp Business பயனர்களுக்கு வழங்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த வசதி தற்போது உருவாக்கத்தில் இருக்கிறது.

1.எடிட்டிங் வசதி

இப்போது புதிய வசதியாக Whatsapp பயனர்கள் தகவல் அனுப்பியவுடன் அதனை எடிட்டி செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. ட்விட்டரில் சமீபத்தில் அந்த 15 நிமிடங்களில் எடிட்டிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக ‘Edit Label’ கொண்ட சேட் பபுள் இடம்பெற்றுள்ளது. இது தற்போது Beta Testing கொண்டு உள்ளது.

2.Whatsapp குழுவில் இனி 1024 பேர்

Whatsapp குழுவில் தற்போது அதிகபட்சமாக 512 நபர்கள் பங்குபெறமுடியும். தற்போது இந்த குழுவில் 1024 நபர்கள் பங்குபெறலாம். ஆனால் இந்த செயலிக்கு போட்டியாளராக இருக்கும் Telegram செயலியில் 2 லட்சம் பேர் பங்குபெறமுடியும்.

Elon musk குற்றச்சாட்டு! ரஷ்யா எங்கள் சேவையை முடக்க நினைக்கிறது!

3.ஆவணங்களை பகிர்வது

தற்போது வாட்ஸாப்ப் மூலம் அனுப்பப்படும் போட்டோ, வீடியோ, GIF Caption கொண்டு அனுப்பலாம். இதன் மூலம் ஆவணங்களை அனுப்பவும் ஏற்கனவே நமக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களை தேடி மீண்டும் எடுக்கவும் முடியும்.

4.Screenshot எடுக்க தடை

ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோக்களை Screenshot எடுக்க முடியாத வகையில் ஆப்ஷன்கள் வரவுள்ளன. இதன் மூலம் நாம் ஒருமுறை மட்டுமே பார்க்கமுடியும் போட்டோ மற்றும் வீடியோக்கள் பாதுகாப்பாக இருக்கும்.

Apple மற்றும் Samsung நிறுவனங்களை நொறுக்க வருகிறது Oppo Find X6 Pro!

5.பிரீமியம் சேவை

புதிதாக Whatsapp Business செயலி பயன்படுத்தும் பயனர்கள் அதில் சில முக்கிய வசதிகளை பயன்படுத்த பிரீமியம் சேவை கட்டணங்களை வழங்கவேண்டிய ஆப்ஷன்கள் விரைவில் அறிமுகம் செய்யயல்படவுள்ளன. இது தற்போது BETA வடிவில் டெஸ்டிங் செய்யப்பட்டுவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.