அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி| Dinamalar

புவனேஸ்வர்: நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் அப்துல்கலாம் ஏவு தளத்தில் இந்த சோதனை நடந்தது. அப்போது இலக்கை தாக்கி அழித்தது. அக்னி ஏவுகணை வரிசையில் இந்த அக்னி – பிரைம் ஏவுகணை புதிய தலைமுறையை சேர்ந்ததுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. இது ஆயிரம் முதல் 2 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது.
இதே போன்று அக்னி பிரைம் ஏவுகணை கடந்த 2018-ம் ஆண்டு டிம்பரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.