‛டுவென்டி-20 உலககோப்பை: வெஸ்ட் இண்டீஸ் வெளியேற்றம்| Dinamalar

ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவில் ‛டுவென்டி-20′ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. ‛பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. இதில் இன்று (அக்.,21) அயர்லாந்து – வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து – ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டிகள் நடக்கிறது.
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ‛டாஸ்’ வென்று முதலில் பேட்டிங்கை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரண்டன் கிங் 62 ரன்கள் குவித்தார். அடுத்ததாக களமிறங்கிய அயர்லாந்து அணி 17.3 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்று ‛சூப்பர்-12′ சுற்றுக்கு முன்னேறியது.

ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த ‛டுவென்டி-20′ உலக கோப்பை தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.