தீபாவளிக்கு முறுக்கு சுட போறீங்களா..? அப்போ இப்படி செய்து பாருங்க! சூப்பராக இருக்கும்



 தீபாவளியை முன்னிட்டு அனைவரது வீட்டில் பலகாரங்கள், முறுக்கு போன்றவை செய்வது வழக்கம். 

அதிலும் சுவையான முறுக்கு அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

மாலை வேளையில் டீ அல்லது காஃபி உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மிக பொருத்தமாக இருக்கும். தற்போது முறுக்கு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.   

தேவையான பொருட்கள்

  • முறுக்கு அரிசி மாவு – 1 கப்
  • உளுந்தம் பருப்பு – 3 டீ ஸ்பூன் அளவு
  • வெள்ளை எள் – 1 டீ ஸ்பூன் அளவு
  • நெய் – 2 டீ ஸ்பூன்
  • மிளகாய் தூள் – ¼ டீ ஸ்பூன்
  • பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை
  • எண்ணெய் – ½ லிட்டர்
  • உப்பு – தேவையன அளவு

செய்முறை

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, இளம் சூட்டில் சூடேற்றவும். இதில் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும்.

ஆறிய பின்னர் அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது உளுந்து மாவு, மிளகாய் பொடி, பெருங்காயம், சீரகம், அரிசி மாவு, நெய் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவு பிசுபிசுப்பாக இருக்க வேண்டும்.

பிசைந்த மாவை அப்படியே உருண்டை பிடித்து எடுக்கவும். அந்த உருண்டைகளை முறுக்கு அச்சு உள்ளே வைத்து, பிழிவதன் மூலமாக பச்சை மாவு அச்சுகளை பெறவும்.

பிறகு கடாய் வைத்து, எண்ணெய் நன்றாக சூடேறியதும் அதில், இந்த முறுக்கு அச்சுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும். முறுக்கு நல்ல பொன்னிறமாக மாறும் வரை வேக விடவும். அவ்வப்போது திருப்பி விட்டு, நன்றாக வேக வைக்கவும்.

இறுதியாக முறுக்கை எடுத்து ஆற வைத்து, காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளவும்.   தற்போது சுவையான முறுக்கு தயார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.