பாக்கிஸ்தான் அணி,இந்திய அணியிடம் அதிர்ச்சி தோல்வி

உலகக் கிண்ண T-20 போட்டித் தொடரின் நேற்று (23) நடைபெற்ற போட்டியில் ,பாக்கிஸ்தான் அணி,இந்திய அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

 இந்த போட்டியில் இந்திய அணிவீரர் விராட் கோலி 82 ஓட்டங்களுடன் களத்தில் இருந்து வெற்றிக்க்கு வித்திட்டார்.

இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாக்கிஸ்தான் அணியை  வீழ்த்தி இந்திய அணி  வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த நிலையில் பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் பாக்கிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். ஆனால், ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 4 ஓட்டங்கள் எடுத்திருந்த ராகுல் 1.5 ஓவரில் நசிம் ஷா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் 4 ஓட்டங்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா 3.2 ஓவரில் ஹரிஸ் ரவுல்ப் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த சூர்யகுமார் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அக்சர் படேல் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றமடைந்தார்.

6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. பின்னர் பாண்டியா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்கள் எடுத்தது. 30 பந்துகளில் 60 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் கோலி, பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால், பாகிஸ்தான் வீரர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 19-வது ஓவரில் கோலி 2 சிக்சர்களை.விளாசினார்.. கடைசி ஓவரில் 16 தேவைப்பட்டது. 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா 19.1 ஓவரில் அவுட் ஆனார். அடுத்து தினேஷ் கார்த்திக் 19.5 ஓவரில் அவுட் ஆனார். இறுதியில் ஆட்டத்தின் கடைசி பந்தில் 1 ஓட்டம் தேவைப்பட்டது. அப்போது, களத்தில் இருந்த அஸ்வின் 1 ஓட்டம் எடுத்தார். இதன் மூலம் வெற்றி இலக்கான 160 ஓட்டங்களை இந்தியா எட்டியது. இதன் மூலம் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.