போரிஸ் விலகியதையடுத்து முக்கிய டோரி எம்.பி எடுத்த முடிவு: 95% ரிஷி சுனக் வெற்றி உறுதி


ரிஷி சுனக்-கிற்கு முன்னாள் உள்துறைச் செயலர்  பிரீத்தி படேல் ஆதரவு.

95% வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளார் ரிஷி சுனக்.

பிரித்தானியாவின் பிரதமர் போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ரிஷி சுனக்கிற்கான ஆதரவு பயங்கரமாக அதிகரித்துள்ளது.

மோசமான பொருளாதார திட்டங்கள் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதை தொடர்ந்து, பிரித்தானியாவின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் பதவியேற்ற 44 நாட்களிலேயே ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டி மீண்டும் துவங்கியுள்ளது, இந்த போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் பாதுகாப்பு மந்திரி பென்னி மோர்டான்ட் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் குறைந்தபட்சம் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னணி போட்டியாளராக பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் போட்டியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து, டோரி எம்.பிகளுக்கு மத்தியில் ரிஷி சுனக்கிற்கான ஆதரவு மடமடவென அதிகரித்துள்ளது.

போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இருந்த கட்சியின் முக்கிய உறுப்பினரான பிரீத்தி படேல் தற்போது ரிஷி சுனக்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

போரிஸ் விலகியதையடுத்து முக்கிய டோரி எம்.பி எடுத்த முடிவு: 95% ரிஷி சுனக் வெற்றி உறுதி | Uk Rishi Sunak Now Has 95 Chance Of Becoming Pmsky news


கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுக்கு எதிராக சொந்த மக்களையே திருப்பிய ரஷ்யா: போருக்கு தயாராகும் உள்ளூர் போராளி குழு

இதன்மூலம் 166 டோரி எம்.பி-களின் ஆதரவு ரிஷி சுனக்-கிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது, அதே சமயம் எதிர் போட்டியாளரான பென்னி மோர்டான்ட்டிற்கான ஆதரவு குறைய தொடங்கியுள்ளது. பென்னி மோர்டான்ட்-க்கு தற்போது 25 டோரி எம்.பிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.