இலங்கையை வந்தடைந்துள்ள நிலக்கரி

60,000 மெற்றிக் டொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து நிலக்கரியை தரை இறக்கும் பணிகள் இன்று (26) மேற்கொள்ளப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடம் இருந்து இந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் 05 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, லக் விஜய அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான பெறுகை டுபாயில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி ஓமல்பே சோபித தேரரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்த மனுவில், இலங்கை நிலக்கரி நிறுவனம், அமைச்சர்கள் குழு, கொள்முதல் குழு உறுப்பினர்கள், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 49 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

லக் விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு 4.5 மில்லியன் மெட்ரிக் டொன் நிலக்கரிகளை வழங்குவதற்கான பெறுகை கோரப்பட்டுள்ளது. அதனை டுபாய் அரசின் Black Sand Commodities நிறுவனத்திற்கு வழங்கவும் தீர்மானித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 உள்ளிட்ட நடைமுறைக்கு எதிராக இந்த டெண்டர் வழங்க தயாராகி வருவதாகவும், அது சட்டவிரோதமானது என்றும், அந்த டெண்டரை செல்லுபடியற்றதாக உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி சோபித தேரர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.