காவலர்களுக்கு இனி இலவச உணவு கிடையாது: அரசின் உத்தரவால் கடும் அதிர்ச்சி..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது காவலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

15 நாட்கள் தங்கி பணியாற்றும் அவர்களுக்கு தேவசம் போர்டு சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக தேவசம் போர்டுக்கு வருவாய் குறைந்ததால் அந்த செலவை அரசே ஏற்று வந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் காவலர்களுக்கு இலவச உணவு கிடையாது எனவும், அவர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வசூலிக்கவும் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காவல்துறை அமைப்புகள், இதுகுறித்து கேரள முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.